கானல் நீராய்......

கற்றோர் மற்றோர் பேதமில்லை,
நல்லவர்க்கும் காலமில்லை,
காசைப் போல கலியுகத்தில்..
கடவுள் வேறு யாருமில்லை....

வஞ்சகப் பேச்சு, வக்கிர புத்தி..
அற்ப ஆசைக்கு அடிமைத்தனம்,
காட்டேரிகளாய் நம்மவர்கள்,
காடேறினும் கலங்கமாட்டார்..

காலத்தின் போர்வையில் பச்சோந்தியாய்..
மாறுவதேனோ மனித மனம்..!
கண்கண்ட காட்சியாவும்..
கானல் நீராய் ஆவதேனோ?!!!!

எழுதியவர் : சுஜன் (13-Sep-11, 1:35 am)
சேர்த்தது : சுஜன்
பார்வை : 440

மேலே