சிறகை விரி ...எழு ......
சிந்தனையை சிறையில் இட்ட தோழா ...!
உன் அறிவுச் சம்மட்டியால் சிறையை
உடைத்து வெளிய வா.......!
சிறகை விரி ...! எழு.....!
தொடுவானம் உனக்கு
தொட்டுவிடும் தூரம் தான்...!
தோல்வியில் துவன்டவனே !
தடைகளைக் கண்டு தளர்ந்து விடாதே ..!
தடைகளை தடயமாக்கிக் கொள் ..!
நீ...........
முன்னேற முதல் அடி முக்கியமல்லவா....
மனதால் முடமாகிப் போனவனே ...!
விதைகள் மண்ணை முட்டி முட்டித்தான்
மண்ணில் முளைக்கின்றன ......
உளியின் அடி பட்டாள் தான்
கற்பாறை கவின் மிகு சிலையாகிறது
பறையணவனே ..! உளியின்
ஒத்தடதுக்கா நீ பயந்துவிடுவது?
பரந்த வானில் நீ சிறகடித்து பறக்க
பாதை உனக்கு முக்கியமல்ல
சிந்தனை ஒன்றே போதும்
சிறகை விரி.....எழு....
தொடுவானம் உனக்கு
தொட்டு விடும் தூரம் தான்........!