பாதுகாப்பு அலுலவலர் பயிற்சி மையம்
என்னவோ புதுசா யாருமே செய்யாத தொழிலை ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னீங்க. அது என்னதொழில்ங்க?
@@@@###
அந்தத் தொழிலை நான் தொடங்கினா பலபேருக்கு வேலை கெடைக்கும்.
@@@@@@@
என்ன தொழில்னு சொல்லுங்களே.
#@@@@@@
சொல்லறேன். நீ தொலைக்காட்சி தொடர்கள் பாக்கற இல்லையா?
@@@@@
ஆமாங்க.
@@@@@@
சரி அந்தத் தொடர்கள்ல குடும்பத்தைக் கெடுக்கிற வில்லிங்க எல்லாம் புதுசா என்ன செய்யறாங்க?
@@@@@@@
அடியாட்கள வச்சு குடும்பத்தில இருக்கிற யாரையாவது கடத்திட்டு போறது,
கடத்திப்போயி உயிரோட பொதைக்கிறது, முகமூடி போட்டுட்டு சாலையில காத்திருந்து தாக்கறது போன்ற வன்முறைச் செயல்களைச் செய்யறாங்க.
@@@@@@
தொலைக்காட்சி தொடர்கள்ல வர்ற பெண்கள் மாதிரி குடும்பப் பெண்களும் ஆடையலங்காரம் முடியலங்காரம் எல்லாம் செய்யறாங்க. இது மாதிரி பணக்கார குடும்ப மருமகள்கள் பலர் தொலைக்காட்சி தொடர் வில்லிங்க செய்யறதைப் பாத்துப் பாத்து கெட்ட புத்தியோட அவுங்க மாதிரிக
அடியாட்களப் பயன்படுத்தி வில்லத்தனம் செய்வாங்க. அப்படிப்பட்ட பெண்களுக்காக அடியாட்கள் நிறுவனம் ஒன்னு அமைக்கப்போறேன். அதில திறமையான ரவுடிகளை வேலைக்குச் சேர்க்கப்போறேன். அவுங்க பதவிப் பேரு 'பாதுகாப்பு அதிகாரிகள்'. பெரும்பாலும் பணக்கார குடும்பங்கள்ல வில்லத்தனம் செய்யற பெண்களுக்குத் தான் குடும்பத்தைக் கெடுக்க அடியாட்கள் தேவைப்படுவாங்க. தொலைக்காட்சி தொடர் வில்லிங்க மாதிரியே கட்டுக்கட்டாய் பணம் தருவாங்க.
@@@@@@@
அருமையான தொழில்ங்க. ஆமாம் அந்த ரவுடீங்க நம்மளக் காட்டிக் குடுத்தா என்ன செய்யறதுங்க?
@@@@@@
ரவுடிகள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவங்க. அவுங்க உயிரே போனாலும் துரோகம் செய்யமாட்டங்க கமலா.
@@@@@@
சரிங்க.