வசீகர புத்தாண்டே வருக

அளவில்லா ஆசைகளின் இரகசிய தீவே
இன்சொல் விரும்பி விளித்திட விரைந்திடு
மனிதகுலம் ஏற்றம்பெறு வண்ணம் மலர்வாயாக
நல்லெண்ணம் தழைக்க மனிதம் வளர்ப்பாயாக

ஆர்ப்பரிக்கும் பேரின்பம் இவ்வாண்டின் பரிசாக
எல்லோர்க்கும் கிட்டட்டும் நல்லதோர்
திங்களிலே
வளமான எண்ணம் ஏற்றத்தின் சின்னமாக
மனதில் குடியிருக்க மலர்க புத்தாண்டே

இடையிடையே வரும் இன்னல்கள் தாண்டி
முயற்சி முறியடிக்காத தோல்வியு முண்டோ
இலக்குகள் அடையும் வலிமை வளர்க்க
தடையில்லா தன்னம்பிக்கை தரணியில் பரவட்டும்

மாறாத மாற்றம் நல்லிணக்கம் கொணர
சகொதரத்துவம் நம் மக்களிடம் மேலோங்கிட
ஆற தழுவி அமைதி காத்து
மன நிறைவோடு மகிழ்ச்சி கூட்டிடு

கிழித்தெறியும் நாளிதழ் அர்த்தமுள்ள தாக்கிடு
நகரும் நிமிடங்கள் நிம்மதி உள்ளடக்கி
ஓராண்டு ஓட்டம் ஒளிமயமாய் ஒளிரட்டும்
2020 நற்செய்திகள் பலதாங்கி துவங்கட்டும்

அன்பில் இளைப்பாறி நட்பில் உறவாடி
ஆரோக்கிய புன்சிரிப்பில் முகம் பொலிவுற
என்றும் உவகை பெருக்குடன் வாழ
இனிதாய் அரும்பிடு வசீகர புத்தாண்டே

எழுதியவர் : அருண்மொழி (31-Dec-19, 10:28 pm)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 140

மேலே