தொடர்கிறேன் நான்

தொடர்கிறேன் நான் !!!
*********************************

வாயிலில்
காத்திருக்கும்
வாலிபனல்ல
நான்..
வாழ்வினில்
அனுபவங்கள்
பலவற்றைக்
கடந்தவன்..

நிகழ்வுகளை
அசைபோடும்
நிலையில் நிற்கிறேன் ..
நீர்த்துப்போன
நினைவுகளுக்கு
உயிர் கொடுக்கிறேன் ..

மறந்தவற்றை
நினைவில்கொணர
முயற்சி செய்கிறேன்..
கற்றறிந்தப்
பாடங்களை
மீண்டும் பயில்கிறேன்..

படித்ததை
கேட்டதை
உணர முயல்கிறேன்..
புரிந்ததை
பரிந்துரையாய்
எழுதி வருகிறேன்..

பகுத்தும்
வகுத்தும்
வாழ உரைக்கிறேன்..
தொகுத்து
சுருக்கமாய்
பதிவும் செய்கிறேன்..

மறைந்தவர்
நினைவுகளுடன்
நாளும் வாழ்கிறேன்..
வாழ்பவர்
வாழ்த்துகளுடன்
காலத்தைக் கடக்கிறேன் !!!

அனைவருக்கும்
எனது இதயம் நிறைந்த
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

நல்லதே நடக்கட்டும்
நாடும் வீடும்
செழிக்கட்டும்
மகிழ்சசி நிலைக்கட்டும் !
அமைதியும்
ஆனந்தமும் மலரட்டும் !

பழனி குமார்
01.01.2020

எழுதியவர் : பழனி குமார் (1-Jan-20, 9:03 am)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : thodarkiren naan
பார்வை : 521

மேலே