பேருக்குத் தகுந்த மாதிரி

ஏன்டா அமெரிக்கா தம்பி, எங்கள மறந்துட்டு அமெரிக்காவில அஞ்சு வருசம் தங்கிட்டயே?
@@@@@#@
அக்கா, எம் பையனும் மருமகளும் பிடிவாதமா தங்க வச்சுட்டாங்க. இன்னும் ஒரு வாரத்தில நான் அமெரிக்கா போயாகணும். உன்னைப் பாத்துட்டுப் போகத்தான் நான் வந்தேன் அக்கா.
@@@@@@@
இந்தப் பொண்ணு உம் பேத்தியா?
@@@@@
ஆமாம் அக்கா. அவளுக்கு வயசு நாலரை ஆகுது. எம் மேலே அவளுக்கு அளவுகடந்த பாசம்.
@@@@@@@
செல்லம், உம் பேரு என்னடி கண்ணு?
@@@@@@
பூர்ணா.
@@@@@@
பூரணாவா?
(இதைக் கேட்டவுடன் அந்தக் பெண் குழந்தைக்கு கோபம் வந்து பாட்டியின் கையில் பூரிவிட ஆரம்பித்தாள்)
அய்யோ தம்பி, என்னடா இந்தப் பூரணா எங் கையைப் பிடிச்சு பூரிட்டு இருக்கிறா? அவளப் பிடிடா.
@@@@@
அக்கா அவ பேரு பூர்ணா. யாராவது 'பூரணா' -ன்னு சொன்னா அவளுக்கு கோவம் வந்திரும். பிடிச்சுப் பூரிவிட்டுருவா.
நீ 'அயம் சாரி'ன்னு சொன்னாத்தான் விடுவா.
@@#@@@@
அய்யம் ச்சாரி.
(இதைக் கேட்டபின்புதான் அந்தப் பெண் குழந்தை பாட்யின் கையைவிட்டு விலகிச் செல்கிறது). நல்லா பேரு வச்சான்டா உம் மவன். பேருக்குத் தகுந்த மாதிரி நடந்துந்துக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@■■■■■■■■■■■■■■■■■■■■
Poorna = complete

எழுதியவர் : மலர் (10-Jan-20, 7:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 148

மேலே