கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை
----------------------------------------------------
Not suitable for all readers.
__________________________
எகிப்து.
மகதி விரிகுடாவில் இருக்கும் கிபியூன் தீவு.
சிலிர்க்கும் செங்கடல் நோக்கியபடி ஜாஸ் மகாட்டி ஓயஸீஸ் ரிஸார்ட் அமைதியோடு நின்றது.
விடுதி அலுவலர் ஃபெகார்னோ இறுதி தீர்வாக ஜலியிடம் மீண்டும் பேசுகிறேன் என்று சபிக்கு உறுதி கொடுத்தார்.
ஜலி யார் என்பது சபிக்கு இப்போது முக்கியம் இல்லை. தங்க அறை இப்போது மிக அவசியம். செங்கடலின் குளிர் இரவை கடுமையாக பாதிக்கும் என்று சுதிர் பலமுறை கூறி இருக்கிறான்.
ஜலிக்கு நீங்கள் உடன் தங்குவதில் எந்த மறுப்பும் இல்லை என்பதால் நீங்கள் இப்போதும் மிகுந்த அதிர்ஷ்டக்காரர் என்று ஃபெகார்னோ சொன்னதும்தான் சபி சற்று நிம்மதி ஆனாள்.
இருவரும் ஒரே அறையை அன்றைய இரவை பகிர்ந்து கொள்ள முடியும்.
நீங்கள் இந்தியாவா...
ஜலி கேட்டபோது சபி தான் ஒரு மராட்டி என்றாள். ஜலி குஜராத்தி. ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு.
வந்த நோக்கம்? டூரிசம்? என்று ஜலி கேட்டதற்கு சில இடங்களில் போட்டோஷூட் வேலைகள் இருக்கின்றன. என் கணவர் இரு விளம்பர நிறுவனங்களை நடத்துகிறார்.
ஜலி ஒரு சிறிய கோப்பையில் ஒயினை நிரப்பிக்கொண்டு கண்ணாடி சாளரம் நோக்கி சென்றாள். கடல் பார்த்தாள்.
உனக்கு திருமணம்... சபி?
சுதிர் என் கணவர். உங்களுக்கு?
இரண்டு முறை திருமணம் ஆயிற்று. இப்போது நான் யாருடனும் இல்லை..
ஒஹ்.... மன்னிக்கவும்.
பரவாயில்லை. ஒயின் சாப்பிடுகிறாயா?
நிச்சயம். வித் வோட்கா.
இருவரும் மத்தியமான தோழமைக்குள் சென்றபோது அந்தி மறைய ஆரம்பித்தது.
செங்கடலின் மீது தூறல் பதிவதை ஜலி ரசித்து கொண்டிருந்தாள்.
மிக்க நன்றி ஜலி...நீங்கள் இல்லையெனில் அறை கிடைக்க மிகவும் கஷ்டம். தீவை விட்டு இப்போது வெளியேறவும் முடியாது. ஆகையால்...
சபி... எத்தனை முறை கூறுவாய்? நான் இன்னும் இரண்டு நாட்கள் இங்கேயே இருப்பேன். நீ விரும்பினால் என்னுடன் இருக்கலாம்.
அது சுதிர் சொல்வதை பொறுத்தது.
உன்னுடையது காதல் திருமணமா? குழந்தைகள் எத்தனை?
இல்லை. பிள்ளைப்பேற்றை தள்ளி வைத்திருக்கிறோம்.
சபியின் நாணத்தை ஜலி உணர்ந்தாள்.
சட்டென்று நினைவு வந்தது போல் நீங்கள்? உங்களுக்கு குழந்தைகள்? சபி கேட்டு கொண்டிருக்கும்போதே ஜலி எழுந்து சென்று மீண்டும் கடலை பார்க்க ஆரம்பித்தாள்.
நிமிடங்கள் கழிகின்றன.
ஸ்பெயின் வோட்காவில் தன்னை வீழ்த்தி கொண்டிருக்கும் சபியின் கண்கள் வளைந்த தாமரை இதழ்கள் போன்று தெரிந்தன.
சபி...
ம்ம்...
ஜலி அவளை நெருங்கி அமர்ந்தாள்.
உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது.
எனக்கும். நீங்கள் அன்பானவர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
அன்பு?
ம்ம்ம்
அன்பு எதன் மொழி? அது எதை எப்படி பேசும்?
அது பேசுவது இல்லை. காலங்களை விடுத்து செயல்படும்.
உண்மைதான். ஜலி எழுந்து சென்று இன்னும் இரு கோப்பைகளில் வோட்கா மட்டும் நிரப்பி கொண்டாள்.
இருவரும் அருந்த துவங்கியபோது இருள் கிபியூன் தீவை உள்ளிழுத்து கொண்டது.
சபி...
சொல்லுங்கள்.
உன் மார்புகள் மிக அழகாக இருக்கிறது.
ஜலி எனக்கு வெட்கமூட்ட வேண்டாம்.
இல்லை. உண்மைதான். அது ஆண்களின் மனதுக்கு வேண்டிய அளவு ஓப்பியம் தர தயாராக இருக்கிறது.
நான் வெட்கமுறுகிறேன் ஜலி.
ஜலி சபியின் மிக அருகில் அமர்ந்து கொண்டாள்.
உன்னிடம் நான் நிறைய பேசவேண்டும்.
இந்த இரவை நாம் அதற்காக்குவோம்.
இப்போது சபியின் போன் ஒலித்தது.
அவள் பேசி முடிக்கும்வரை ஜலி காத்திருக்க....பேசிவிட்டு சுதிர் என்றாள்.
என்ன விஷயம்?
நாளை நான் இந்தியாவுக்கு செல்ல வேண்டும்.
எனில்...
நாளை மாலை செல்ல வேண்டும்.
ஆக நமக்கு இந்த ஒரு இரவு மட்டுமே.
ஏன்? நீங்கள் எப்போது இந்தியா வரப்போகிறீர்கள்?
அது இப்போது சொல்ல முடியாது. நான் இங்கிருந்து பத்து நாட்கள் கழிந்த பின்னர் எத்தியோப்பியா செல்ல வேண்டும். அங்கிருக்கும் ஒரு யூனிவேர்சிட்டியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் நான். நான் இந்தியா வந்து ஆறு ஆண்டுகள் கூட முடிந்து இருக்கலாம்.
ஒஹ்...இது இப்போதுதான் தெரியும்.
உங்கள் கணவர்...
அவர் ஒரு ஆண்.
ஆண்களைத்தான் மணம் செய்வோம். சபி மெல்ல சிரித்தாள்.
ஆனால் அது எப்போதும் பெண்ணுக்கு உரிய உடல் அல்ல.
ம்ம்...கேள்விப்பட்டிருக்கிறேன்.
சபி, அதை நீ உணர்ந்திருக்கிறாயா?
இல்லை.
வெகு நிச்சயமாக சில கணங்களில் வந்து போகும் எண்ணம் அது.
அப்படியெனில்?
ஜலி சபியின் தோள் மீது சரிந்து மெல்ல கூறினாள். இந்த மார்பின் உஷ்ணம் ஒரு பசித்த ராஜாளி பறவையை எனக்கு காட்டுகிறது.
ஜலி...சற்று விலகி இருங்கள். ஃப்ளீஸ்.
அறைக்குள் ஹீட்டர் ஒலி மட்டும் கேட்டு கொண்டிருந்தது.
அவர்கள் இருவரும் பெரிய வெல்வெட் மெத்தையில் இரண்டு கடினமான துருவங்கள் போல் அமர்ந்து இருந்தனர்.
நான் கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியவள். அங்கு ஒருமுறை இந்த அவலம் எனக்கு நேர்ந்தது. க்ரிஸ்ட்டினா என்னை காயமாக்கிய நினைவை வெகுகாலம் மறக்க முடியவில்லை.
சபி.. அதுதான் உண்மை.
பின் ஆண்கள்?
அவர்கள் விதைக்கும் இயந்திரம். போர்க்களம். உடலை கிழிக்கும் மருத்துவ அரக்கர். அவர்கள் நிகழ்த்துவது எல்லாம் உடலின் மீது சில யோசனைகளை மட்டும்.
உயிரில் இன்னொரு உயிர் கலந்து சிந்திக்க வேண்டுமென்றால் பெண்ணுக்கு பெண் மட்டுமே பாதுகாப்பு.
சுதிர் சபியோடு உறவு எல்லாம் முடிந்து சபியின் மீது எழுந்திருக்கும்போதே அவன் கொட்டாவி விடுவதை பார்த்த நினைவு அவளுக்கு வந்தது.
ஜலி இப்போது என்ன சொல்கிறாள்?
நீ என்ன சொல்கிறாய் ஜலி?
ஜலி சபி உடையின் பித்தான்களை விடுவித்தாள்.
இப்போது சபி எதிர்க்கவில்லை.
உன்னை எளிமையாக்கு சபி.
இருந்தும்...நீ...பெண்...
பெண் மனதின் இன்னொரு வடிவமாய் இன்னொரு பெண் உடலை பார்த்தது உண்டா?
இல்லை ஜலி.
புராதன ஓவியங்களில் கூட அது இருக்காது. வேட்டை மிருகங்களின் வாழ்க்கை வழியே தன்னை வடிவமைத்து கொண்ட ஆண் தன் புணர்ச்சியையும் அப்படியே கற்று கொண்டதன் விளைவு.
இப்போது சபி மேலுடை இன்றி இருந்தாள்.
பார்க்கிறாயா சபி....நீ?
எது?
இந்த நிமிர்ந்த மார்புகள். தங்களுக்குள் எந்த இடைவெளியும் இன்றி வெப்பமாகி கொண்டிருக்கும் காட்சி...
ம்ம்ம்...
ஜலி மெல்ல முத்தமிட்டு சிவந்த ஒரு பால் சுரப்பியின் பாதியை தன் வாயினுள் செலுத்தி கொண்டாள்.
சபி தன்னிடம் தாங்க முடியாத அவமான உணர்ச்சி பெருகிக்கொண்டிருப்பதை உணர்ந்த அடுத்த கணம் ஜலியை பிடித்து ஓங்கி தள்ளினாள். விலகி கொண்டாள்.
போதும் விட்டுவிடு ஜலி. மிகுந்த அருவெறுப்பு இது.
சபி....
சற்று நேரம் அங்கே அமைதி மட்டும் இருந்தது.
பசிக்கிறது என்றாள் சபி.
ஜலி எதுவும் பேசாமல் உணவுக்கு சொல்லிவிட்டு இன்னும் இரு கோப்பைகள் விஸ்கியை குடித்து முடித்திருந்தாள்.
கடல் தாவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
ஜான் லெஜெண்ட் பாடிய ஆல் ஆஃப் மீ பாப் தொகுப்பை இசைக்கவிட்டு கடலை பார்த்து கொண்டிருந்தாள் ஜலி.
சுதிர் என்னை அடித்திருக்கிறான். அவனுக்கு நான் பிடித்த மாதிரி இல்லை என்று நினைக்கும்போதெல்லாம்...
ஜலி சபி தனக்குள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தாள்.
ஆண்கள் அன்பை அப்படியும் காட்டுவர்கள் என்று உனக்கு சொல்லி தந்திருப்பார்களே... என் முதல் கணவன் சௌத்ரியும் அப்படித்தான்.
இவர்கள் உண்மையில் நம் உடல்களை மட்டுமே விரும்புகின்றனர்.
இல்லை சபி. நம் உடல் மூலம் அவர்கள் கடந்து செல்கின்றனர்.
எதை? யாரை?
அவர்களை விட்டு அவர்களை.
இறுதியில்...
யோனி அவர்களை விழுங்கி விடுகிறது. ஜலி தன் நடுவிரலை உயர்த்தி பின் அப்படியே கவிழ்த்தாள்.
ஜலி தலையை குனிந்து கொண்டாள்.
ஆண்களிடம் ஏதேனும் வாசனை இருக்கிறதா அதை நீ என்றாவது உணர்ந்தது உண்டா சபி?
தெரியவில்லை எனக்கு.
நமக்கு தெரியாது மனதுக்குள் தென்படும்.
அகில் தாகூர் வேதியியல் பேராசிரியர். நாங்கள் பைசலாபாத் கல்லூரியில் பணியாற்றியபோது ஒரு மாலை நேரத்தில் கல்லூரி வேதியியல் ஆய்வகத்தில் புணர துவங்கினோம்.
அவர் என்னை மிகவும் விரும்புவதாகவும் அதனாலேயே என் உடலில் எங்கெல்லாம் துளைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் நான் நிரம்பி வழிய வேண்டுமென்றும் கூறினார்.
நீ அவரை வெறுக்க இந்த ஒரு காரணம் போதும் என்றாள் சபி.
நான் அவரை நேசிக்க இந்த ஒரு காரணம் போதும் என்றாள் ஜலி.
பின் ஏன் பிரிந்தாய்?
அவர் இறந்து விட்டார். ஒரு விபத்தில்.
பின் ஆண்கள் பிடிக்காது வேறு பெண்களை தேடி சென்று விட்டாயா ஜலி?
இல்லை. நான் எந்த பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லை.
ஆக என்னிடம்...இப்போது...
அது ஒருவேளை இன்ஸ்டிங்ன்ட் ஆக இருக்கலாம்.
என்ன அது ஜலி?
ஆழ்ந்து யோசிக்க என்ன இருக்கிறது. பிடிக்கவும் கவர்ந்து செல்லவும் உடல் ஒரு பொருள் அல்ல. சபிக்கு புரியுமா?
ஆனால்...
ஆனால் என்ன சபி?
உடல் மனதை மம்மியாக மட்டுமே மாற்றி கொண்டிருக்கிறது. இப்படி ஒருமுறை க்ரிஸ்ட்டினா என்னிடம் சொல்லி இருக்கிறாள். அவள் நான் தோத்தரித்து தோற்று போனவள் என்றாள்.
ஜலி அமைதியாக சபியை பார்த்து கொண்டிருந்தாள்.
சுதிர் உன்னை நன்றாக கவனித்து கொள்கிறார் என்பது எனக்கு புரிகிறது என்றாள்.
அப்படி அல்ல. ஆனால் அவருக்காக நான் நன்றாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
சபி...
நிமிர்ந்து பார்த்தாள்.
உன் கண்கள் இப்போது கலங்குகின்றன.
தலையை குனிந்து கொண்டாள்.
சுதிர் இன்றுவரை என் விருப்பங்களை புரிந்து கொண்டவர் இல்லை.
ஆண்களின் ஆசைகள் விருப்பத்தில் இருந்து அல்ல, அதிகாரத்தில் இருந்து.
நான் ஈரமாகும்போது என்னை அவர் முத்தமிட வேண்டும் என்று விரும்புவேன். அவர் என் மீது மோதிக்கொண்டிருப்பார்.
ஜலி சபியிடம் சென்று அமர்ந்தாள்.
சபி தன் கைகளை ஜலியின் கைகளோடு பிணைத்து கொண்டாள்.
சபி...என்னை முத்தமிடுங்கள்.
சபி ஜலியின் இதழ்கள் மீது ஒற்றி எடுத்தாள்.
ஆண்கள் நரகத்தின் முன் நிற்பது போல் செய்ய வேண்டாம் சபி. பட்டாம்பூச்சி பறப்பதை பார்ப்பது போல் முத்தமிடு.
அவர்களுக்கு இடையில் ஆஸ்திரேலிய யூலிசீஸ் பட்டாம்பூச்சிகள் பறந்து போகலாயின.
சபி ஜலியின் கைகளில் நெகிழ்ந்தாள்.
இருவருக்குமிடையில் காற்று அஞ்சி நடுங்கியது.
இரண்டு உடல்களின் ஓரங்கள் அனைத்திலும் மின்சாரம் சீறியது. சபியின் உடலெங்கும் ஜலியின் விரல்கள் நாக்குகளாக மாறி பரவி ஊறின.
சபி...
ம்ம்ம்...
இது பார்...ஒரு ஆண்.
எங்கே?
ஜலி தன் நடுவிரலை காட்டினாள்.
என்ன ஜலி?
இதுதான் ஆண். எந்த வடிவமும் இல்லாது எந்த உணர்வும் இல்லாத தண்டு இது.
இதுதான் நம்மிடம் பால் சுரக்க செய்கிறது.
சபி...
ஜலி அந்த விரலை சபிக்குள் புகுத்தினாள். சின்ன நகமொன்று ஆவேசம் கொண்டு பின் வளைவான பாதையில் திருகும் நதிபோல் பயணிக்க ஆரம்பித்தபோது சபி கண்களை செருகி கொண்டிருந்தாள்.
ஜலி காட்டுத்தீயை போல் அந்த நதியை விழுங்க விழுங்க செங்கடல் நிலவொளியில் தன் மேனியில் மீன்கள் துள்ளி துள்ளி சரிவதை பார்த்து கொண்டே இருந்தது.
சபி நிதானிக்கும்போது நள்ளிரவு மணி ஒன்றுக்கு மேல் ஆகி இருந்தது.
இருவரும் மீண்டும் ஒயின் எடுத்து பருகி கொள்ள துவங்கினர்.
என்ன உணர்ந்தாய் சபி.?
சுதிர்...
சுதிர் போன்றா இருந்தது இந்த அனுபவம்.
இல்லை. சுதிர்கிட்ட போகும்போது பெரிய சந்தைக்கு குறுக்கில் வழி விடாம சில மாடுகள் நின்னுட்டு இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். ஆனா நீ வேற...
நான் பெண்.
நானும் பெண்.
அதுதான் நம் உடல்கள் சிதிலமில்லாத மொழியை கற்று கொள்கிறது. ஆண் என்பது பெண் உடலின் முரண்பட்ட ஆயுதம்.
சபி மீண்டும் ஜலியை முத்தமிட்டாள்.
நான் காதல் என்ற சொல்லில் மரக்கட்டையை போல் இத்தனை நாட்கள் இருந்திருக்கிறேன் என்றாள் சபி.
காதல் மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு அளிக்கப்படுகிறது என்றால் அது உண்மையில் இயல்பான ஒன்று அல்ல. எந்த பொக்கிஷமும் இன்னொரு பொக்கிஷத்தை தேடிக்கொண்டிருக்காது.
பிள்ளை பெறுவது சொத்துடமையின் மறைமுக கட்டளை என்றாள் ஜலி.
ஜலி நான் உன்னை புணர விரும்புகிறேன். ஆனால் எனக்கு உண்மையில் அது எப்படி என்று தெரியவில்லை என்ற சபியை தன் மீது பரப்பிக்கொண்டாள் ஜலி.
பாஷை காமத்தை குருடாக்கி விடும். ஒரு ஆறு கடலை குடிக்க விரும்புவதுதான் காமம். தெரிந்து புணர்வது மரணத்துக்கு நிறம் பூசி கண்டறியும் முயற்சி.
சபி உன்னை இந்த விஷயத்தில் எந்த நுனியிலும் சமாதானம் செய்து கொள்ள போராட வேண்டாம். என்னில் உன்னை தியாகம் செய்ய விரும்பு என்றாள்.
ஜலி, நீ நனைந்திருக்கிறாய். நீ இப்போது வழுக்கி செல்கிறாய் என்றாள்.
ஓடையின் சப்தம் விலங்குகளுக்கு இடையில் குறுக்கிடாது.
உனது நாக்கால் என்னை தொடு. உன் கண்களால் என் உடல் எங்கும் நீவு. உன் உடல் சூட்டில் மனம் சோர்வை போக்குவதற்கு அனுமதி. குகைக்குள் எந்த விலங்கும் இருக்க முடியாது.
சபி ஜலியின் உடலோடு உடலாக முறுகி இருவருமாக பிழிந்து முடித்தபோது நள்ளிரவு வியர்த்து மணி மூன்றை தாண்டி இருந்தது.
செங்கடல் மீது இரவு கனமின்றி பயணித்தது. அது தனக்குள் சொல்லி கொண்டது இப்போது இன்னும் இருவர் தூங்க ஆரம்பித்து விட்டனர் என்று.
பகல் வந்தும் ஜலி எழுந்தபோது மணி ஒன்பதை தாண்டி இருந்தது. பசித்தது.
சபியை எழுப்பினாள்.
குளிக்க வேண்டும் எழுந்திரு.
சபி நன்கு விழித்து கொண்டாள்.
இன்று கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஏன் போக வேண்டும் பேசாமல் ஜலியோடு சென்று விட்டால் என்ன என்றும் தோன்றியது.
ஜலி...
ம்ம்.
வா. நாம் இன்று சேர்ந்து குளிக்கலாம்.
சரி வா...
இருவரும் குளிக்கும்போதும் உடலுறவு எண்ணம் தோன்றியது.
ஜலி இன்னொரு முறை...
இருவரும் ஷவரை உச்சத்தில் வைத்து கொண்டனர்.
பத்து மணிக்கு வெளியில் வந்த போது பசித்தது.
காளான் உணவுகள் வரச்சொல்லி விட்டு காத்திருக்கும் நேரத்தில் ஸ்ட்ராபெரி ஜூஸ் பருகினர்.
ஜலி...
என்ன என்பதுபோல் பார்த்தாள்.
ஐ லவ் யூ.
இப்போது சிரித்தாள்...மீ டூ...
நீ பேசாம இந்தியா வந்துடு.
எதுக்கு சபி?
நாம் ஒண்ணா இருக்கலாம்.
இருந்தா...
சந்தோசமா இருக்கும்.
யாருக்கு?
எனக்கு..அப்பறம்...உனக்கும்..
எப்படி?
நாம்...நாம் தீர தீர முத்தமிடுவோம்.
முத்தமிட்டால்?
சபி ஜலியை புரியாமல் பார்த்தாள்.
ஜலி எழுந்து வந்து சபியின் தலையை தன் மீது சார்த்தி கொண்டாள்.
காமம் ஆண்களின் சிந்தனை. அவர்களுக்கு அது மருந்து. நமக்கு அப்படி அல்ல.
புரியலை ஜலி...
உன்னைப்போல் இன்னொரு பெண்ணிடம் நான் இப்படி சென்றது இல்லை. செல்லவும் முடியாது. நேற்று என்னை நான் வரைந்து கொண்டேன். இன்று குளியல் அறையில் அதை அழித்தும் விட்டேன் என்றாள்.
முற்றிலும் புரியலை ஜலி...
எனக்கும் கூட சபி. ஆனால் புரிந்துகொள்ள நாம் ஏன் முயற்சிக்க வேண்டும். அது பிதற்றிக்கொண்டே இருக்கும். சம்பவங்களின் உதடுகள் மிக பெரியது. வலியின்றி பேசும். காயங்களை விரும்பும் மனம்தான் உடலை ஆட்சி செய்கிறது. நாம் ஒருவருக்கொருவர் அதை வீழ்த்தி கொண்டோம்.
ஜலி, நாம் ஆண்களுக்கு வெகு தொலைவில் இருக்கிறோம். அவர்களுக்கு அது புரியவில்லை. நாம் அப்படித்தான் இருப்போமா ஜலி...
போன் ஒலித்தது.
சுதிர் சபியை அங்கிருந்து புறப்பட்டு உடனே மும்பை வர வேண்டும் என்றும் பின் இரண்டு நாட்கள் கழித்து டோக்கியோ செல்ல வேண்டும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான்.
சபிக்கு தன்னை சுதிர் சாப்பிட்டாயா என்று கூட கேட்காததுதான் கொன்றது. ஜலியை ஆதுரமாக பார்த்தாள்.
நாம் ஆண்களுக்கு வெகு தொலைவில் இருக்கிறோம். அவர்களுக்கு அது எப்போதும் புரியாது சபி. சௌத்ரியும் சுதிரும் போட்டியை நிறுத்த மாட்டார்கள்.
இந்த உடல்கள் யாராலும் வரைய முடியாத சித்திரம்.
இரண்டு பெண்களும் அழுது கொண்டிருக்கும் போது உணவு ஆறி கொண்டிருந்தது.