மந்தி- அடியே மந்தி

மந்தி, அடியே மந்தி, எங்கடி போய்த் தொலஞ்ச. சனியன் பிடிச்சவளே.
சொல்லாம கொள்ளாம எங்கடி போன மந்தி. மந்திச் சனியனே.
@@@@@@@
யாரம்மா "மந்தி, மந்தி"ன்னு கூப்புட்டுட்டு 'சனியனே"ன்னு வேற சொல்லறீங்க?
@@@@@@@
'மந்தி' எம் பொண்ணும்மா.
@@@@@@
பெத்த பிள்ளைக்கு 'மந்தி'னா பேரு வைக்கிறது? நல்லா இல்லீங்க!
@@@@@@@
எம் பொண்ணோட முழுப்பேரு 'மந்திகா' (Manthika = thoughtful). நாங்க 'மந்தி'ன்னுதான் கூப்புடுவோம்.
@@@@@@@
என்ன இருந்தாலும்...
@@@@@@
எம் பொண்ணுப் பேரு 'மந்திகா' தமிழ்ப் பேரு இல்லமா. இந்திப் பேருமா.
@@@@@@
ஓ.... இந்திப் பேரா. ரொம்ப சந்தோஷம். 'ஸ்வீட் நேம்'.
@@@@@@@
எம் பொண்ணுப் பேரை காதில கேக்கறவங்க எல்லாம் 'ஸ்வீட் நேம்'னுதான் சொல்லறாங்க. இந்திப் பேருங்க எல்லாமே நம்ம தமிழர்களுக்கு 'ஸ்வீட் நேம்ஸ்'தாம்மா.

எழுதியவர் : மலர் (13-Jan-20, 2:05 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 128

மேலே