பொங்கல் ஏன் ஜனவரி 15 இல் வருகிறது கடந்த சில வருடங்களாக ஜனவரி 14 இல் தானே வரவேண்டும்

தமிழர் திருநாளாம் பொங்கல் கடந்த சில வருடங்களாக ஜனவரி 15 -இல் வருகிறது ,வழக்கமாக அது ஜனவரி 14 -இல் தானே வரும் ..உண்மைதான் வழக்கமாக அது ஜனவரி 14 -இல் தான் வரும் . அப்படியானால் தற்போது ஏன் ஜனவரி 15 இல் வருகிறது . இதற்கு ஏதேனும் அறிவியல் அல்லது சமய காரணங்கள் இருக்கிறதா என்ற கேள்வி நம்முள் எழுகிறது அல்லவா? இதற்கான காரணம் இதோ ..

இந்திய வானவியல் கணித கனக்குப் படி ,பொங்கல் பண்டிகை சூரிய நேரப்படி அல்லது சூரிய காலண்டர் படி தான் கணக்கிடப்படுகிறது .இதற்கு காரணம் இந்த பண்டிகை சூரியனுடன் தொடர்பு உடையதாக இருப்பதால் . மற்ற பண்டிகைகள் சந்திர காலண்டர் அதாவது லூனார் காலண்டர்படி கணக்கிடப்படுவதால் ஒவ்வொரு வருடமும் அது மாறி மாறி வருகிறது .இதற்கு எடுத்துக்காட்டு தீபாவளி பண்டிகை .ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வரும் . ஆனால் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு அப்படி மாறுவதில்லை .

சரி ! குறிப்பிட்ட காரணத்தை பார்ப்போம் .நம்முடைய இந்திய வானவியல் அறிவியல் கணக்குப்படி சூரியன் ஒவ்வொரு வருடமும் மகர ராசியில் நுழைய கூடுதலாக 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது ,இது அதன் சுற்றுவட்டப்பாதையில் ஏற்படும் சுழற்சி மறுபாட்டினால் . இந்த அடிப்படியில் ஒவ்வொரு 72 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு நாள் தள்ளி மகர ராசிக்குள் நுழைகிறது தனுசு ராசியில் இருந்து .

1935 இம் ஆண்டில் இருந்து 2007 இம் ஆண்டு வரை பொங்கல் ஜனவரி 14 காம் தேதி கொண்டாடப்பட்டது . அதற்கு முன்பு அதாவது 1862 ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை ஜனவரி 13 ஆந்தேதி பொங்கல் கொண்டாடப்பட்டது .2008 ஆம் ஆண்டு முதல் 2080 ஆம் ஆண்டு வரை ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகிறது . இந்த கணக்குப்படி வரும் 2081 ஆண்டு முதல் 2153 ஆம் ஆண்டு வரை 72 ஆண்டுகளுக்கு இந்தபண்டிகை ஜனவரி 16 ஆந்தேதி கொண்டாடப்படும் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன்.க (16-Jan-20, 12:32 pm)
பார்வை : 97

சிறந்த கட்டுரைகள்

மேலே