வெற்றியின் இரகசியம்
--- கேப்டன் யாசீன் ----
நீங்கள் எப்படி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றீர்கள் என்ற கேள்வியைக் கேட்டபோது ட்ரம்ப் அந்த இரகசியத்தை சொல்ல மறுத்தார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தியபோது வேறு வழியின்றி சொல்லத் தொடங்கினார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டபோது எனக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அப்புறம் தேர்தல் நெருங்கும் வேளையில் நடந்த கருத்துக் கணிப்பில் ஏறக்குறைய என் தோல்வி உறுதி செய்யப்பட்டது.
நானும் என் கட்சியினரும் முடங்கிப்போனோம். ஒருகட்டத்தில் என் கட்சியினரே எனக்கு எதிராக நின்றனர். திடீரென்று அந்த அதிசயம் நிகழ்ந்து நான் வெற்றிபெற்றேன்.
என்ன அதிசயம் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தார் ட்ரம்ப்.
நிருபர்களின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின் அந்த இரகசியத்தை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்.
சத்தியம் பண்ணாத குறையாக யாரிடமும் சொல்ல மாட்டோம் என்ற உறுதியை நிருபர்கள் தந்தபிறகு சொல்லத் தொடங்கினார்.
நீங்களும் வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.
தோல்வியைக் கண்டு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட யோசித்தபோது இந்தியர் ஒருவரைச் சந்தித்தேன்.
அவர் ஒரு புத்தகம் கொடுத்தார்.
அதை வாங்கி வைத்துக் கொண்ட
தேர்தலில் நான் வெற்றியடைந்தேன் என்றார்.
அது ஆங்கிலப் புத்தகமா?
இல்லை, இந்தியாவில் ஏதோ ஒரு தமிழ்ப் புத்தகமாம்.
உங்களுக்கு தமிழ் தெரியுமா?
தெரியாது.
அமெரிக்க மக்களுக்கு..?
அவர்களுக்கும் தமிழ் தெரியாது.
ஆனால் அந்தப் புத்தகம் வைத்திருந்தால் அறிவாளியாம். அதனால் என்னை அறிவாளி என்று வெற்றிபெறச் செய்தனர்.
அந்தப் புத்தகம் எது?
துக்ளக்.
- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்