இனிமேல் தான் எல்லாமும்

பொதுவாகி போனதடா பொறுப்பின்மை
பொதுவான சொத்தெல்லாம் வலிந்தவன் கையில்
பொக்கிடமாய் காக்க வேண்டியவை பொது ஏலத்தில்
போற்ற வேண்டிய கலைகளெல்லாம் சிதைவை நோக்கி
பொதுவான நீதிக்கூட காசுக்காய் வளைய
போதை கொடுக்கும் பானத்தாலே அரசின் இயக்கம்
பொதுமக்கள் விரும்புவதை எல்லாம் அரசு வெறுக்கும்
பொதுத் தேர்தலில் இனி எல்லாம் காசே வெல்லும்
பொதுவானவன் என்போர் எல்லாம் கயவனாக
பொக்கையான திட்டம் மட்டும் அரசின் கையில்
பொதுநலம் என்பது இங்கு மருந்துக்கும் இல்லை
பொதுவாய் ஒரு மாற்றம் வரும் என எண்ணியிருந்தால்
பொறுப்பில்லா அக்கெட்ட எண்ணம் வேண்டாம் இனி
- - - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Jan-20, 9:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 414

மேலே