வைக்கம் முகம்மது பஷீரின் சிறுகதைகளில் ஒன்று

வைக்கம் முகம்மது பஷீரின் சிறுகதைகளில் ஒன்று


தற்பொழுது “உலகப் புகழ் பெற்ற மூக்கு”வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய சிறு கதை தொகுப்பு (பஷீரின் தேர்ந்தெடுத்த சிறு கதைகள்) தமிழாக்கம் குளச்சல் மு. யூசுப். வாசித்தேன்.

வைக்கம் முகம்மது பஷீர் 1908 ஜனவரி 19ம் தேதி வைக்கம் தாலுகாவில் தலயோலப் பரம்பில் காயி அப்துல் ரகுமான்-குஞ்ஞசாச்சமா தம்பதியின் மூத்த மகனாய் பிறந்தார்.

சுதந்திர போராட்ட வீர்ர் உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டு காவலர்களால தாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார். சுதந்திர போராட்ட வீரர் என்பதால் ஆங்கில அரசு அவரை மதராஸ், கோழிக்கோடு, கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் அடைத்தது.

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் போன்று தீவிரவாத அமைப்பொன்றை அமைத்து செயல்பட்டார். அமைப்பு இதழாக “உஜ்ஜீவனம்” என்னும் வார இதழை தொடங்கினார்.

பத்தாண்டு காலம் தேசாந்திரியாக கழித்தவர். இக்கால கட்டங்களில் பஷீர் செய்யாத வேலைகளே இருக்காது.

“பால்யகால சகி””பாத்துமாவின் ஆடு””உப்பாக்கொரு ஆனை இருந்தது”ஆகிய படைப்புக்கள் இந்தியாவின் முக்கியமான எல்லா மொழிகளிலும், மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு,மலாய், சைனீஸ் , ஜப்பானிய மொழிகளிலும் வெளிவந்திருக்கின்றன.
அவர் பெற்ற விருதுகளின் பட்டியல் கணக்கிலடங்காது 1994ம் வருடம் ஜூலை
5ம் தேதி அன்று இறந்தார்.

மொழியாக்கம் குளச்சல் மு.யூசுப்

குமரி மாவட்டத்தின் கடற்கரை நகரான குளச்சலில் பிறந்தவர். தமிழை தாய் மொழியாக கொண்டவர். இவரது மொழி பெயர்ப்பில் வெளி வந்த புதினத்தில் குஞ்ஞப்துல்லாவின் “ஸ்மாரக சிலைகள்” என்னும் நாவல் (மீஸான் கற்கள்)சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருவள்ளுவர் திருச்சபையின் விருதையும், தமிழ் தொண்டர் விருதையும் கலை இலக்கிய பெருமன்றத்தின் தொ.மு.சி. ரகுநாதன் நினைவு பரிசையும் பெற்றது.

நெருக்கடியான காலகட்டத்தில் நடந்த ராஜன் கொலை வழக்கு குறித்து ராஜனின் தந்தை டி.வி.ஈச்சவரியர் எழுதிய அனுபவ பதிவை “ஒரு தந்தையின் நினைவு குறிப்புகள்’ எனும் பெயரிலும் குஞ்ஞப்துல்லாவின் “பரலோமம்”நாவலை “மஹ்ஷர் பெருவெளி” எனும் பெயரிலும், நளினி ஜமீலாவின் “ஒரு பாலியல் தொலிலாளியின் சுயசரிதையையும், காவலர் ராமச்சந்திர நாயரின் “நான் வாழ்ந்தேன்”என்பதற்கான சாட்சியையும், இ.பி.ஸ்ரீகுமாரின் “அழியா முத்திரை” நாவலையும் பெண்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Jan-20, 3:50 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 90

சிறந்த கட்டுரைகள்

மேலே