எல்லாம் கலைஞர்கள் தான்

உலக அதிசங்களில் ஒன்று, தன் பேச்சால் பிறரை கவர்வதுதான்.இது எல்லாராலும் முடியாது. சிலர் பேச ஆரம்பித்தவுடன் தன் சொந்த வேலைகளை போட்டு விட்டு வந்து கவனித்து மகிழ்வார்கள். அதே சிலர், ஒரு சிலர் பேசுகின்ற போது எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று ஆரம்பித்தவுடன் எனக்கு வேற வேலை இருக்கிறது என்று ஓடி விடுவார்கள். உண்மையில், இந்த பேச்சு திறன் கொண்டவர்கள் ஒரு அதிசய பிறவி.

நிறைய பேசுபவர்களுக்கு எழுத வருவதில்லை. நிறைய எழுதுபவர்களுக்கு பேச வருவதில்லை. ஒரு வேளை, இவை இரண்டும் பெற்ற யாராவது இருந்தால், அவர்கள் தெய்வீகப் பிறப்பாய் இருக்கலாம். இது அந்த அதிசயதிலும் ஒரு அதிசயம். ஆங்கில எழுத்தாளர் அடிசன் அவர்கள் எத்தனையோ கட்டுரைகள் எழுதி இருக்கிறார். ஆனால், ஒரு வார்த்தை கூட பொது இடங்களில் பேசியதில்லை என்பர்.

பேசாமல் அமைதியாக இருப்பவர்களுக்கு கற்பனை வளம் மிகுதி என்பார்கள். உண்மைதான். இவர்கள் பெரும்பாலும் சுயபுத்தி. இவர்கள் நடைமுறையை ஏற்றுக்கொள்வது கடினம். தனக்கென்று ஒரு உலகம் படைத்து கொள்வர். தனக்கென கொள்கைகள் வைத்து கொண்டு வாழ்வார்கள். நிறைய புத்தகங்கள் படிப்பார்கள். இவர்கள் வாழ்க்கையும் ஒரு புத்தகத்தை போல்தான் இருக்கும்.

ஒரு பிரச்சினை என்றால், சிலர், திட்டி தீர்ப்பார்கள். சிலர் அடிதடி வரை போவார்கள். சிலர், ஏதும் பேசாம்மல் விட்டு விடுவார்கள். ஆனால், இவர்களோ, தன் எழுத்தின் மூலம் கொட்டி தீர்ப்பார்கள். இப்படி பட்டவர்களை ஆங்கிலத்தில் escapist என்று சிலர் சிலரை சொல்வார்கள். உண்மையில், மிக சக்திவாய்ந்த ஆயுதம் எழுதப்பட்ட வார்த்தைதான்.

சிலர் அர்தமற்று நிறைய பேசுவார்கள். சிலர் அர்த்தமாக நிறைய பேசுவார்கள் (பேச்சாளர்கள்)
சிலர் பேசவேண்டிய இடத்தில் பேசவேண்டிய விசயத்தில் மிக சுருக்கமாக பேசுவார்கள் (தத்துவ ஞானிகள்). சிலர், எதுவுமே பேசாமல் இருப்பார்கள். இப்படி நான்காக பிரிக்க தேவை இல்லை முதல் மற்றும் கடை, இவர்கள் இருவரும் ஒருவர்தான். சில நேரங்களில் கடை முதலைவிட உயர்ததாக இருக்கும். இந்த தத்துவ ஞானிகள் பேச்சை மேற்கோள் காட்டி நிறைய பேசுபவர்கள் தான் பேச்சாளர்கள்.

சிலர், படித்தவர்கள் என்று காட்டுவதற்காக, தத்துவத்தை படித்தவர்களுக்கு மட்டும் புரிகிற வகையில் எழுதுவார்கள். இன்னும் சிலர் அவர்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி எழுதுவார்கள். அவர்கள் விளக்கம் சொன்னால் மட்டுமே புரியும். சிலர் நிறைய எழுதுவார்கள் ஒன்றும் புரியாது. சிலர் நச்சென்று ஹைக்கூ எழுதுவார்கள் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்.

படித்தவர் படித்தவர்களுக்கு மட்டும் எழுதுவது முன்பே படித்தவர்கள் அனைவரும் அறிந்ததுதான். அனைவருக்கும் புரிகிற வகையில் எழுதுவது மிக நன்று. இப்படி படித்தவர்கள் சாதாரண மக்களுக்கு அம்மக்களை பற்றி எழுதவேண்டிய ஒரு புதிய கோட்பாட்டை கொண்டு வந்தவர் ஆங்கில எழுத்தாளர் William Wordsworth அவர்கள்.

கவிதையில் என்ன இருக்கிறது. வெறும் கற்பனை தானே. இப்படிபட்ட அடுத்தவர்களின் கற்பனையும் எதுகை மோனையும் என்ன பயன் தருகிறது. அது எதற்கு என்றும் சிலர் குறை கூர்வதுண்டு. தத்துவஞானி பிளாட்டோ அவர்கள், கவிஞர்களை நாடு கடத்த வேண்டும் என்று சொன்னார். ஒரு தத்துவத்தை பக்கம் பக்கமாக எழுதுவதும் உண்டு ஒரு வரியில் எழுதுவதும் உண்டு. அவை ஊக்கப்டுத்தும். ஆனால் கவிதை அப்படி இல்லை. கற்பனையும் கருத்தும் கலந்த ஒன்று. ஊக்கபடுத்துவத்துடன் மகிழ்ச்சிப்படுத்தும்.
சொல்லவரும் கருத்தை அப்படியே சொல்வது எளிது அது தத்துவம். ஆனால், கவிதை அப்படி இல்லை. கற்பணையும் சொல் வண்ணமும் சேர்த்து தத்துவ கருத்தை சொல்வது தான் கவிதை.

விமர்சனம் என்ற பிரிவில், அது பெரியது இது பெரியது என தனக்கு பிடித்த ஒன்றை அவரவர்கள் உயர்த்தி பேசி கொள்வார்கள். பேசுவது பெரிதா எழுதுவது பெரிதா? என்று கேள்வி கேட்டால் விமர்சனம் சரிபாதி வரும். இன்னும் சொல்ல போனால், எழுத்தில், எது சிறந்தது என்றால், அவரவர் தனக்கு பிடித்ததை சொல்வார்கள். நடுவர்கள் எல்லாம் சமம் என்பார்கள்.

பேசுபவர்கள் பேசட்டும்.
கேள்வி கேட்பவர்கள் கேட்கட்டும். அதை பார்ப்பவர்கள் பார்க்கட்டும். எழுதுபவர்கள் எழுதட்டும். விமர்சிப்பவர்கள் விமர்ச்சிக்கட்டும். வாசகர்கள் வாசிக்கட்டும். ரசிப்பவர்கள் ரசிக்கட்டும்.
இவர்கள் எல்லோரும்
கலைஞர்கள் தான்.

எழுதியவர் : Suruleeswari (23-Jan-20, 11:08 am)
சேர்த்தது : சுருளிஸ்வரி
பார்வை : 87

மேலே