பரகசியம் ii

பரகசியம் (ii)

இந்த அகர உகர மகரங்களின் பெயர்களை வைத்தியம் வாதம் யோகம் ஆகியவற்றில்
ஈடு படுத்தும் வேளையில் மாற்றி பிரயோகிப்பர் சித்தர். இவைகளை அறிந்துகொள்ள
தவம் வேணும் பக்தி வேணும். சித்தர்களின் அனுகிரகம் வேண்டும். நாம் கேள்விப்ப ட்டி
ருப் பதெல்லாம் ஒன்பது கிரகங்கள். அதிலும் இரண்டு கிரகங்கள் திடகிரகங்கக் இல்லை
மாயா அல்லாது சாயா த் தோற்ற கிரகங்கள் இராகு கேதுவாம். அகத்தியர் சொல்கிறார்
பத்தாவது கிரகமும் அதுபோன்றே கண்ணால் பார்த்தரிய முடியா அனுகிரகம். அதாவது
கடவுளின் அனுகிரகம். இது எளிதில் கிடை ப்பதில்லை. இதற்கு எத்தனைப் பாடுபட
வேண்டும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.. தான் பரம்பொருளின் பெருங்
கடலில் கலக்கவே பிறவிகள் பலவும் எடுத்து தூய்மை அடைந்து இயமம் நியமமென்ற ஒன்பதுநிலையினைக் கடந்து அதன் பிறகே அவன் கடவுளை அருகும் தகுதிபெற்று அதற்குண்டான வழி முறைகளை அதே பரம்பொருளின் அனுகிராகத்தால்அடையப்பெற்று காயகற்பம் தவம் அமிர்தம் யோகம் செய்து யோகியா கிறான்.

அடாவடிப் பகுத்தறி வாளன் கடலின் உப்புத் தண்ணீராக இருந்து ஏதோ முன்செய்த ஒரு நல்ல வினையின் காரணமாக மழை நீராக , நல்ல நீராக, பூமியில் வந்து விழுகிறான். சில படித்தும் சில படிக்காததுமாய் பூமிக்கு வந்தது எதற்கு என்று அறியாது கடவுளை மறந்து பழித்து மீண்டும் பழையக் குருடி கதவைத் திறடி கணக்காய் தான் மட்டும் பாழாகாது சுற்றுப்புற மக்களின் தூய நெஞ்சத்தை அசுத்த மாக்கி தானும் கெட்டு மற்றவரையும் கெடுத்து தான் மீண்டும் வந்த இடமான அ தேக் கடலிலே மீண்டும் எழ உதவியற்று அங்கேயே சேர்ந்து சோர்ந்து அழிந்து போவான்.

மீண்டும் அகர உகரங்களைப் பார்ப்போம். அகரம் அண்டமாம் உகரம் பிண்டமாம்
மகரம் ஊமையாம் மூச்சுக் கலையில் ஹம் என்று உள்ளிழுத்து தங்கவைத்து பின் சோ என்று ரேசிக்க வேண்டும் என்பர் சிலர் சோ என்றிழுத்து நிறுத்தி ஹம் என்று வெளிவிடவெண்டும் என்பர். அகர உக ரங் களை அதிகமாக பேசிய சித்தர்களின் இருவரே. ஒருவர் அகத்தியா மாமுனி மற்றவர் நந்தீஸ்வரர். அவற்றைப் பிறகு பார்ப்போம்.

தொடரும்

எழுதியவர் : பழனிராஜன் (23-Jan-20, 11:27 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 83

மேலே