சத்தம்
எனது கல்லூரியின் இறுதி நாள் இறுதி வகுப்பு......
வகுப்பாசிரியர் வகுப்பினுள் வருகிறார்....
மிகவும் கண்டிப்பான ஆசிரியர்...
நான்கு வருடங்களில் அவரது வகுப்பு அமைதியோ அமைதியாக இருக்கும்.....
அன்று இறுதி நாள் என்பதால் ஆண் பெண் பாரபட்சமின்றி அனைத்து மாணவரும் ஆரவாரத்தோடு சத்தமிட்டு கொண்டிருந்தனர்...
வருகை பதிவேட்டின்படி பெயர் வாசித்துக்கொண்டிருந்த ஆசிரியரோ ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி சத்தம்போட்டால் எப்டி கேட்கும் என்றார்.....
அதற்கு மாணவர்களில் ஒருவன் சத்தம்போடாமல் எப்படி கேக்குமென கேட்டுவிட்டான்.....
வகுப்பு முழுவதும் சிரிப்பலை....
மாணவன் கேட்டது சரியா!
இல்லை நான் கேட்டது சரியா! என
வகுப்பாசிரியர் ஒரு நிமிடம் திகைத்துவிட்டார்!