சஹாரா பாலை வனத்தில் நீ நடந்தால்

சஹாரா பாலை வனத்தில் நீ நடந்தால் --காற்று
சஹானா ராகம் பாடும்
நைல் நதியில் நீ நீந்தினால் ----நீல நைலும்
வானவில்லின் ஏழு நிறங்களில் ஓடும்
பனிபடர்ந்த இமய மலையில் நீ நடந்தால் ----பனி உருகி
பனிநீரோடையாகித் துள்ளி ஓடும்
நீ எங்கிருந்தாலும் எங்கு நடந்தாலும் ---என் கவிதை
உன்னை மட்டுமே பாடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Feb-20, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே