அன்பே அன்பைக் கொடு
எத்தனை நாள் தான் இப்படி ?
ஒளிரும் உன் நிலா முகத்தின்
காந்த விழிகள் கவர்ச்சி வலை வீசி
வாவென எனை அழைக்கும் '
அருகே நான் நெருங்க நெருங்க
புன்முறுவல் அருகும்
பொய்க்கோபம் பெருகும்
பெண்ணே என் கண்ணே
நான் உன் கண் முன்னே
ஏனடி என்மீது
இத்தனை கஞ்சத்தனம்
மெல்லிய உன்
சிற்றிடை போன்று
இத்தனை அபிரிமிதமாய்
என் மீது அன்பை
இவ்வாறு உன் நெஞ்சில்
சுமந்து கொண்டு
அஷ்ரப் அலி