அவள்
அன்னமாய் நடந்து வந்தாய்
துள்ளி துள்ளி ஆடி வந்தாய்
காண மயிலாய் என்னோடு
பேச வந்தாய் உன் பேச்சு
ராகம் கூட்டி என் காதில்
தமிழ் இசையாய் ஒலித்ததடி
ஆடலும் பாடலும் நீயானாய்
ரசிகனாய் மெய்மறந்து
உன்னருகே நான் எனக்கு
அப்போது எல்லாம் நீயானாய்