குழந்தைகளே
கனவுபோல் இரு கவிதைகள்
மாலைத்தென்றலாய்
மழைசுமந்த மேகத்தின்
தூவானத்தூறலாய்
மலரின் மௌனமாய்
பட்டின் தீண்டலாய்
எதிர்பார்க்கா நிமிடத்தில்
பிரவாகமெடுக்கும் பெருவெள்ளம்போல்
திடுமென உதித்துவிட்டு
சொர்க்கம்பார்க்கச்செல்ல அவசரமாய் சென்றுவிட்டால்
காத்திருந்த கைகளிங்கே வழியறியாமல் திகைக்கிறதே..