கவிஞன்

நான் கவிஞன்
எனக்கு பசித்தால்
நான் கவிதையை புசிக்கிறேன்
கவிதைகள் மீது படுத்து
கவிதையை போர்வையாக்கிக்கொள்வேன்
உறங்கும்போதும் நான் காணும்
கனவெல்லாம் கவிதையே
என் மானத்தை காப்பது
கவிதைகளே
நான் கவிதைகளையே
உடுத்திக்கொள்கிறேன்
எனக்கு சர்வமும் கவிதையே

இந்த உலகில் எனக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள கவிதையை தவிர்த்து வெறோன்றும்
இல்லை

என் வாழ்வும் தாழ்வும்
கவிதையே
கவிதையே இல்லையெனில்
என்னால் சுவாசிக்கவே முடியாது

உலகில் உள்ள அனைத்திலும்
கவிதை கலந்திருக்கு
கவிதை இல்லையேல்
உலகமே சுற்றாது

கவிஞனுக்கு சொந்தமான
இடம் என்று இந்த உலைகில்
எதுவும் இல்லை என்றாலும்
இந்த உலகில் உள்ள அனைத்தும்
இவனது மூச்சுக்காற்றினாலே சுவாசிக்கிறது..

கவிஞனுக்கு எல்லையே இல்லை
விண்ணையும் தாண்டி
இவனது ஆளுமை உள்ளது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (11-Feb-20, 9:22 pm)
Tanglish : kavingan
பார்வை : 254

மேலே