பாவம் என் திறன்பேசி

என் திறன்பேசியின்
தொடுதிரையில் நகரும்
ஒவ்வொரு இலத்திரன்களும்
நொதுமிகளும் அறியும்
நான் அடிக்கடி தேடுவது
உனது விம்பம் தான்!


நான் அனுப்பும் அத்தனை
நுண்ணலைகளும் வெறும்
செய்திகளை மட்டுமல்ல
என் உயிரின்
தேடல்களையும் தான்
கண்டங்கள் தாண்டி
உன்னிடம் சேர்க்கிரது!

சத்தியமாய் என்
கைகளில் இந்த
ஏவாளின் கனிக் கருவி
மாத்திரம் இல்லையெனின்
நான் கனவிலேயே
களித்திருப்பேன்
என் அத்தனை நீ
இல்லாத நாட்களையும்.

என்னவோ எனக்கு தெரியும்
இந்த தூரம் வெகு
விரைவில் தீரும்
அதன் பின் என்
திறன்பேசி பாவம்
தனித்திப்போகும்!

எழுதியவர் : ரஞ்சித் குலசிங்கம் (19-Feb-20, 5:09 am)
பார்வை : 380

மேலே