காதலில் களவு

தந்தை தாய்க்கு தெரியாது ஒரு பெண்
ஓர் ஆணைக்கண்டு காதல் கொண்டு
காதலியாய் அவன் பின்னே போதல்
காதலில் களவு.... அது அந்த சங்க காலத்தில்
இருந்து இன்றுவரை நீடிக்க ..... சங்க காலத்து
பெண்ணின் கள்ள காதலை அவள் அன்னை
கண்டுகொண்டாள் ஒரு நாள் பெண்ணின்
தோளின்மேல் மொய்க்கும் கருவண்டு கண்டு
ஆம் அவள் தோள் சம்பங்கி வாசம் வீச
முன்னாள் அந்தி மாலையில் குளக்கரையில்
கண்ணியவள் காதலன் மார்பில் .....
அவன் அணிந்த சம்பங்கி மாலையின் வாசம்
இன்று அவள் தோழி நீங்காமல் இருக்க
கருவண்டு மொய்க்க சூசித்தமாய் கன்னியின் தாயும்
கண்டுகொண்டாள் .......

இன்றும் இத்தரா கள்ள காதலும் உண்டு
அன்று அவள் காதலனின் பரந்த வெறும்
மாலைகளணிந்த மார்பைத் தழுவ இவள்
கச்சையணிந்து புணர்ந்த தோளும் வாசம் வீசியது
இன்றோ இவள் கை விரலில் சிறு வைர மோதிரம்...
காதலர் தினப் பரிசு ..... இவள் அன்னை கண்டுகொண்டாள்
இவள் கள்ள காதல் அப்பட்டமானது !

களவும் கற்று மற.......

காலங்கள் மாறலாம் காதல் மாறாது
பரிசுகள் மாறலாம்
உள்ளங்கள் ...... காதல் ஒன்றே கூறும்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (19-Feb-20, 1:24 pm)
Tanglish : kathalil kalavu
பார்வை : 95

மேலே