நீ தானே எனக்கு யாவும் நீ தானே

காலில் முள்தைத்தது ரத்தம் சொட்டியது
கவலை இல்லை உணரும் சிந்தை இல்லை
அன்று ஒற்றையடிப் பாதையில் நடந்தேன்
இன்று தடைகளை முறியடிக்க
நான் கற்றுக் கொண்டேன்
முட்களை விட்டுப் பூக்களைப் பறிக்கிறேன்
காட்டு வழிப் பாதையில் சென்ற எனக்கு
இந்த சீரிய செப்பனிட்ட பாதை
இது யாரால் வந்தது உன்னால் தானே
உன்னைக் கண்ட பின்பு தான் வாழ்வின்
செழுமையை முழுமையாக நான் உணர்ந்தேன்
தேன் சொட்டும் உன் பூ இதழோரம்
சொல் முத்துக்கள் வந்து கொட்டும்
கலைந்த முடியை என் கைகள் சரிப்படுத்தும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (25-Feb-20, 12:00 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 114

மேலே