காதல் மொழி
வாகன கண்ணாடியில்...
எந்தமொழியைக் கண்டாலும்
எழுத்துக்கள் - நேர்
எதிராகத்தான் புலப்படும்-
ஆனால்....
உந்தன் விழிகளின் -
காதல் மொழிக்கு மட்டும்
சற்று விதிவிலக்கு -
உன் விழிகளின் காதல்மொழியோ
எனக்கு நேரடியான பிம்பத்தையே
காட்சிப்படுத்தி - உன்னுடைய
காதலை கற்பிக்கின்றது....♥♥♥
-நட்புடன் நளினி விநாயகமூர்த்தி