நளினி விநாயகமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நளினி விநாயகமூர்த்தி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 03-Mar-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2020 |
பார்த்தவர்கள் | : 1466 |
புள்ளி | : 109 |
என் படைப்புகளை -
நிறைசொல்லும் நண்பர்களுக்கு நன்றி-
குறைசொல்லும் நண்பர்களுக்கும் நன்றி-
ஏனெனில் - உங்கள் குறைகள்யாவும்
என்னை செதுக்க உதவும் உளிகளாகும்...
-நன்றியுடனும் நட்புடனும் - எல்லோரின்
நலம்விரும்பும் கவிஞன் நான்.....
மேலான கருத்துக்களுக்கு : kavinjarnalinivinayagamoorthy@gmail.com
சவரக்கத்தி - நீ மட்டும்தான்
சொல்லிட்டு மொட்டையடிக்கிறாய்
மக்களிடத்தில்.....!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி
அவள் -
தினந்தோறும்
தவறாமல் விரதமிருப்பாள் -
ஒரு நாளைக்கு
ஒருவேளை மட்டுமே
உணவினை
உண்பாள் - மற்ற
இருவேளையும்
இறைவனுக்கான விரதமென்பாள்-
திங்கள் கிழமை
சிவனுக்கான விரதமென்றும்
செவ்வாய் கிழமை
முருகப் பெருமானுக்கு விரதமென்றும்
புதன் கிழமை
பெருமாளுக்கான விரதமென்றும்
வியாழக் கிழமை
சாய் பாபா விரதமென்றும்
வெள்ளிக்கிழமை
சக்திக்கான விரதமென்றும்
சனிக்கிழமை
ஆஞ்சநேயருக்கான விரதமென்றும்
ஞாயிற்றுக் கிழமை
சூரிய பகவனுக்கான விரதமென்றும்
இப்படி - விரதங்களுக்கான
இறைவனை பட்டியலிட்டு -பின்
தன் மனதுக்குள்ளே
தான் வணங்கும் இறைவனிடத்தே -
மன்னிப்பையும் கேட்டு
மங்கையவள் கூறினாள் -
உலகத்தோரின
வயல்வெளிப் பெண்ணே -
எந்த நிலையிலும்
எச்சரிக்கையாயிரு...
ஏனெனில் - இங்கே
எப்போதும் படையெடுக்க
காத்துக் கொண்டிருக்கின்றன
களவாடும் வெட்டுக்கிளிகள்......!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி
அச்சம் தவிர்
அச்சம் தவிர்
சகோ..
சகோ...
நீ அச்சம் தவிர்
நீ வாழும்காலம் மிச்சமுள்ளது
அதனால் -
உன் அச்சம் போகட்டும்
நம்பிக்கையோடு -
நம் நாட்கள் நகரட்டும்-
நீ -
நோய்வந்து சாகும்முன்னே
நீ -
நோயெண்ணி சாகாதே...
வெயிலுக்கு வந்த
வறண்ட இருமல
கொரோனா வந்ததா
நினைக்காத...
வெயிலுக்கு வந்த
தலை சுத்தல
கொரோனாவுக்கு வந்ததா
நினைக்காத...
அலர்ஜிக்கு வந்த
தும்மல கண்டு - நீ
அலறியடிச்சு ஓடாதே
ஏ.சி.க்கு கீழ உட்கார்ந்து..
குளிருது...
குளிருது...
காய்ச்சல் வந்துடுச்சின்னு
கூவாத - நீ
கொரோனா வந்ததா புலம்பாத
நீ வெயிட்டா இருந்து
பத்தடி நடந்தாலும்
ஆத்தாடி
அம்மாடின்னு மூச்சு
ஆறுமுகம் அண்ணா...
எங்க டார்ச் லைட் எடுத்து கிளம்பிட்டீங்க...?
அதுவாப்பா
நம்ம வயலுக்கு இன்னிக்கு நைட்டுக்கு தண்ணிய பாய்ச்சனும்..
இன்னிக்கு தவறவிட்டா...
நமக்கு தண்ணி கிடைக்கிறது கஷ்டம்... அதான்..
சரிதாண்ணே...
தண்ணி கிடைக்கும்போதே...
பாய்ச்சறதுதான் நல்லது....
அதுவும் இல்லாம இன்னிக்கு சிவராத்திரி கண்முழிச்சா நல்லது...
நமக்கு ஒவ்வொரு நாளுமே சிவராத்திரி தானப்பா...
பயிர் வளர்ந்து அத பாதுகாப்பாய் கொண்டுவந்து சேர்க்கிறவரைக்கும் நமக்கு சிவராத்திரி தான்...
ஆமாண்ணே...
பயிர வளர்க்கிறதும் ஒரு தவம்தான்...
ஆனா இந்த காலத்து புள்ளைகளுக்கு எங்க தெரியுது...
ஆமா தம்பி...
இந்த காலத்துல
என் காதலியே - தேர்வறையில்
வினாத்தாள் கொடுத்தாா்கள்
வினாக்கள் இருந்தன - ஆனால்
விடைத்தாள் கொடுத்தார்கள் -
விடையே இல்லை...!!!
எதற்கும் விடைத்தெரியாது - அன்று
நான் விழித்திருக்கையில் - உன்
விடைத்தாளையாவது பாா்த்து -
எழுதலாம் என்று -
எவரும் அறியாதவண்ணம் -
நான் பார்க்கையில் -
நமக்குள் என்ன பொருத்தம்....
இருவரின் விடைத்தாளிலும்
ஏதுமில்லை - பின்
இருக்கும் நேரங்களை
எப்படி கழிப்பதோ என்று
எண்ணிய தருணத்தில்தான் -
விடையாய் வந்து விழுத்தது....
உந்தன் வெள்ளந்திச் சிரிப்பு.....!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி
சுத்தியலையும் -
கடப்பாரையும் -
காலையில் பிடித்த கைகள் -
நாள் முழுக்க பிடித்தவண்ணம் -
பணிசெய்த காரணத்தால் -
சிவந்த அந்திவானமே -
காட்சியளித்தது அப்பாவின் கைகளில்.....!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி