கொரோனா - அச்சம் தவிர்

அச்சம் தவிர்
அச்சம் தவிர்
சகோ..
சகோ...

நீ அச்சம் தவிர்
நீ வாழும்காலம் மிச்சமுள்ளது
அதனால் -
உன் அச்சம் போகட்டும்
நம்பிக்கையோடு -
நம் நாட்கள் நகரட்டும்-

நீ -
நோய்வந்து சாகும்முன்னே
நீ -
நோயெண்ணி சாகாதே...

வெயிலுக்கு வந்த
வறண்ட இருமல
கொரோனா வந்ததா
நினைக்காத...

வெயிலுக்கு வந்த
தலை சுத்தல
கொரோனாவுக்கு வந்ததா
நினைக்காத...

அலர்ஜிக்கு வந்த
தும்மல கண்டு - நீ
அலறியடிச்சு ஓடாதே

ஏ.சி.க்கு கீழ உட்கார்ந்து..
குளிருது...
குளிருது...
காய்ச்சல் வந்துடுச்சின்னு
கூவாத - நீ
கொரோனா வந்ததா புலம்பாத

நீ வெயிட்டா இருந்து
பத்தடி நடந்தாலும்
ஆத்தாடி
அம்மாடின்னு மூச்சு வாங்கும்..
நீ
என்னமோ...
ஏதோன்னு பதறியடிச்சு ஓடாதே...

கொஞ்ச நாளைக்கு
கூட்டம் போட்டு திரியாதே
கூட்டம் இருக்கிற
இடம்தேடியும் போகாத
கண்டதையும் தின்னாதே
கண்டநோயை வாங்காத

நீ சுத்தமாயிருந்து -
கொஞ்சம் சத்தமாவே சொல்லிடு
எனக்கு நோயில்லன்னு...
எனக்கு நோயில்லன்னு...

தவறி -
நோயே வந்தாலும்...
நீ நொந்து சாகத
நீ நம்பிக்கையோடு -
நீ துணிந்தே போராடு -
வந்த நோயும் புதைத்துபோகும்
எதிர்மறை சிந்தனையும்
சிதைந்து போகும் - என்றும்
உன்நம்பிக்கையை மட்டுமே பரவலாக்கு
நோயினை ஒருபோதும் பரவலாக்கிவிடாதே

இதுவும் கடந்துபோகும் - ஒருநாள்
இதுவும் கடந்துபோகும்
எல்லாம் கடந்துபோவதுபோல்....

சுத்தமாயிருப்போம்...- நோயை
சுத்தமாய் ஒழித்திடுவோம்.....!!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (20-Mar-20, 11:17 pm)
பார்வை : 639

மேலே