எழுந்து வா மனிதா---பாடல்---
மெட்டு : காற்றின் மொழி ஒலியா
பல்லவி :
மேற்கில் விழும் கிழக்கே எழுவாய்
நாட்டின் இருள் கிழித்தே உதிப்பாய்
ஞான ஒளி கொடுத்தே நிமிர்வாய்
ஞாய வழி நடந்தால் உயர்வாய்
உலகத்தில் ராமன் பிறப்பதுண்டு
வளர்த்திட காலம் நினைப்பதில்லை...
உள்ளத்தில் கடவுள் இருப்பதுண்டு
உணர்கின்ற மனிதன் நிலைப்பதில்லை...
மேற்கில் விழும்...
சரணம் 1 :
காசைத் தேடும் வாழ்வில் அறிவை விதையாக்கு
காலம் பூக்க வைக்கும் உழைப்பை மழையாக்கு
ஆசை கொண்ட நெஞ்சில் கனவை உருவாக்கு
வானில் பறந்து செல்ல செயலைச் சிறகாக்கு
அழுக்குப் படிந்த உள்ளத்தில் அன்பைக் கொண்டு சலவை செய்...
அமைதி இழந்த மனிதர்க்கு அன்பை உயிரில் கலவை செய்...
கடற்கரை மனதில் பதிகின்ற
பாசங்கள் அலையில் மறையுதிங்கே...
காலத்தின் கரையில் படிகின்ற
பாவங்கள் மட்டும் நிறையுதிங்கே...
மேற்கில் விழும்...
சரணம் 2 :
தீபம் அணையும் போது பூமி இருளாது
பூவின் பனியில் தெரியும் உலகம் நிலைக்காது
தீமை நிறைந்த சபையில் நன்மை பிறக்காது
நேர்மை என்ற நெருப்பில் நீதி இறக்காது
தோற்றப் பின்னும் முயற்சித்தால் அதனைப் போன்ற உயர்வில்லை...
ஏற்றத் தாழ்வு பார்க்கின்ற கண்களுக்குள் உயிரில்லை...
மனிதத்தின் வடிவில் பிறக்கின்ற
கடவுளின் குழந்தை நீதானே...
மனிதத்தை மடியில் சுமக்கின்ற
தர்மத்தின் தாய்மை நீதானே...
மேற்கில் விழும்...
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..