சாயம் வெளுத்த விவசாயி
சாயம் வெளுத்த விவசாயி
விளைநிலத்தில் விதையோடு
உயிரையும் விதைக்கிறான்
விவசாயி...!
நெற்றித்துளி வியர்வை சிந்தி
அவன் படும் அரும்பாடு
அதற்கு ஈடு இணை ஏது... ?
விவசாயம் மேலோங்க- அவன்
தன் உடற்சாயம் வெளுக்கிறான் தினம் தினம்!
உண்ணும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்திடவே- அவன்
அல்லும் பகலும் ஓய்வின்றி அல்லாடுகிறான்!
விவசாயி தரும் விதைமணியில்
மேதாவிகள் பலர் நூற்றாண்டுகள் கடந்திட
அவன் மட்டும் அரைவயிற்றோடு வாழ்கிறான்;
இத்தனைக்கும் உற்பத்தி செய்திட்ட பொருளுக்கு ஊதியத்தை நிர்ணயிக்கும் சிறு உரிமை அவனுக்கு இல்லை;
அடிமாடு விலையில் அவன் உழைப்பு இருக்க
பறித்தவனுக்கோ பலநூறு மடங்கு லாபம்;
விவசாயம் பார்த்த விவசாயி மட்டும்
சாயம் வெளுத்து வெளுத்தே காயத்தோடு வாழ்கிறான் என்றும்...!
ஏற்றுமதி என்ற பெயரில்
எம்குலத்தின் உழைப்பு
எட்டாத தூரம் காற்றில் பறக்க
மண்ணை பொண்ணாக்கிய
எம் விவசாயி மட்டும்
அரைவயிற்று அரிசிமணிகளோடு
இன்றும் அல்லாடுகின்றான்............
விளைநிலத்தில் விதையோடு
உயிரையும் விதைக்கிறான்
விவசாயி...!
நெற்றித்துளி வியர்வை சிந்தி
அவன் படும் அரும்பாடு
அதற்கு ஈடு இணை ஏது... ?
விவசாயம் மேலோங்க- அவன்
தன் உடற்சாயம் வெளுக்கிறான் தினம் தினம்!
உண்ணும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்திடவே- அவன்
அல்லும் பகலும் ஓய்வின்றி அல்லாடுகிறான்!
விவசாயி தரும் விதைமணியில்
மேதாவிகள் பலர் நூற்றாண்டுகள் கடந்திட
அவன் மட்டும் அரைவயிற்றோடு வாழ்கிறான்;
இத்தனைக்கும் உற்பத்தி செய்திட்ட பொருளுக்கு ஊதியத்தை நிர்ணயிக்கும் சிறு உரிமை அவனுக்கு இல்லை;
அடிமாடு விலையில் அவன் உழைப்பு இருக்க
பறித்தவனுக்கோ பலநூறு மடங்கு லாபம்;
விவசாயம் பார்த்த விவசாயி மட்டும்
சாயம் வெளுத்து வெளுத்தே காயத்தோடு வாழ்கிறான் என்றும்...!
ஏற்றுமதி என்ற பெயரில்
எம்குலத்தின் உழைப்பு
எட்டாத தூரம் காற்றில் பறக்க
மண்ணை பொண்ணாக்கிய
எம் விவசாயி மட்டும்
அரைவயிற்று அரிசிமணிகளோடு
இன்றும் அல்லாடுகின்றான்............