டார்ச் லைட்
ஆறுமுகம் அண்ணா...
எங்க டார்ச் லைட் எடுத்து கிளம்பிட்டீங்க...?
அதுவாப்பா
நம்ம வயலுக்கு இன்னிக்கு நைட்டுக்கு தண்ணிய பாய்ச்சனும்..
இன்னிக்கு தவறவிட்டா...
நமக்கு தண்ணி கிடைக்கிறது கஷ்டம்... அதான்..
சரிதாண்ணே...
தண்ணி கிடைக்கும்போதே...
பாய்ச்சறதுதான் நல்லது....
அதுவும் இல்லாம இன்னிக்கு சிவராத்திரி கண்முழிச்சா நல்லது...
நமக்கு ஒவ்வொரு நாளுமே சிவராத்திரி தானப்பா...
பயிர் வளர்ந்து அத பாதுகாப்பாய் கொண்டுவந்து சேர்க்கிறவரைக்கும் நமக்கு சிவராத்திரி தான்...
ஆமாண்ணே...
பயிர வளர்க்கிறதும் ஒரு தவம்தான்...
ஆனா இந்த காலத்து புள்ளைகளுக்கு எங்க தெரியுது...
ஆமா தம்பி...
இந்த காலத்துல புள்ளைக -
கணிப்பொறி உலகத்துல ...
வார முழுக்க கூட பணி செய்றாங்க...
ஆனா ஊருக்கு வந்தா...
ஒருநாள் வயலுக்கு வந்து கண்முழிக்க கஷ்டமா இருக்குன்னு சொல்றாங்க...
ஆமாண்ணே...
செயற்கை உலகத்து வாழ்க்கைக்கு மனிச அடியெடுத்து வச்சா -
"இந்த வயலோடும் - இயற்கை இரவோடும் வாழற வாழ்க்கைய இழந்துட்டா"
ஆனா தம்பி...
இந்த நிலை மாறும்...
இன்னிக்கு பாரு..
ஃபோன் பன்னா "கரோனா வைரஸ்" விழிப்புணர்வு வந்தபிறகுதான் போன் போது... "
"கண்டதை தின்னு
கண்ட நோய் வந்து
கண்டம் விட்டு
கண்டம் பரவுது - இது
காத்துல பரவி - அடுத்தவ
கதைய முடிக்குது..."
சரியா சொன்னீங்கண்ணே..
இந்த உலகம் இனிமேலாவது புரிஞ்சுக்கும்...
இயற்கை உணவோட அவசியத்தை...
புரிஞ்சு தான ஆகனும் தம்பி...
இல்லன்னா நாம வாழறதே கஷ்டமா போயிடுமே...
நம்ம சந்ததிகளுக்கு AC காத்த தந்த நாம...
இயற்கை காத்த கூட - விசமா தந்துட்டு போற..
இந்த நிலை மாறனும் தம்பி...
நான் வர தம்பி....
நேரமாச்சு...
சரிண்ணே... பாா்த்து போங்க...
இன்றைய இயற்கை இரவு உங்களுக்குதான்...
( இயற்கையை வாழவைத்து - நாம்
இயற்கையோடு வாழ்வோமாக )
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி