அக்குசா கக்குசா

ஏன்டா முனியாண்டி, வெளிநாட்டில இருக்கிற உம் பேரன் மனைவி முழுகாம இருக்கறான்னு சொன்னயே, கொழந்தை பொறந்துருச்சா?
@@@@
ஆமாம் யக்கா. ரட்டைப் புள்ளைங்க. போன மாசமே பொறந்திருச்சுங்க.
@@@###
உம் பேரன் குடுத்து வச்சவன்டா முனியாண்டி. ரண்டு மகாலச்சுமிங்க. ரண்டுக்கும் பேரு வச்சுட்டாங்களா?
@@@@@@
உம். ஒரு பொண்ணுப் பேரு அக்குசா (Aksha = God's blessings). இன்னொரு பொண்ணுப் பேரு கக்குசா (Kaksha = white rose).
@@@@@@
நல்லா பேரு வச்சாங்கடா. அக்குசா. கக்குசா. மூணு பொண்ணுங்க பொறந்திருந்தா மூணாவது பொண்ணுக்கு 'தொக்கு'சான்னு பேரு வச்சிருப்பாங்க.
@@@@@@@
அக்கா, நம்ம காலம் வேற. இந்தக் காலம் வேற. தமிழ்ப் பேரை புள்ளைங்களுக்கு வச்சா கேவலம்னு நெனைக்கிற காலம். பெத்தவங்க இசட்டம். நமக்கென்ன கெடக்குது.
@@@@@@
ஆமான்டா முனியாண்டி. நீ சொல்லறதும் சரிதான்டா.

எழுதியவர் : மலர் (10-Mar-20, 11:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 117

மேலே