ஊட்டிக்கு பயிற்சிக்கு சென்றவன்

ஊட்டிக்கு பயிற்சிக்கு சென்றவன்

பஸ்ஸை விட்டு இறங்கிய சேகர் தன் கையை திருப்பி மணி பார்த்தான். அதற்குள் “உறை பனி” வாட்ச்சின் மீது மறைத்திருந்தது. வலது கையால் துடைத்து விட்டு பார்த்தான். மணி பத்தை தொட ஒரு சில நிமிட துளிகளை காட்டியது. இந் நேரத்துக்கு மேல் என்ன செய்வது? பஸ் நிலையத்தில் தங்கவும் முடியாது. தோல் பையில் ஓரிரண்டு துணி மணிகள், கொஞ்சம் பணம் அதுவும் இரண்டு நாளில் கடையில் சாப்பிட்டால் திரும்பி போக பணம் காணாது. இப்பொழுது என்ன செய்வது? யோசித்து நிற்கும் நேரம் நடக்க ஆரம்பிக்கலாம். குன்னுர் செல்லும் பாதையில் ஒரு 'பர்லாங்க்' நடக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.அதன் பின் அங்கு ஒரு “வாட்டர் டேங்” வரும் அதன் அருகில் சென்று வலது புறம் திரும்பி ஒரு பத்து நிமிட நடை சென்றால் வள்ளுவன் நகர் போர்டு தென்படும். அந்த தெரு வழியாக சென்றால் சரியாக ஐந்தாவது வீடு. இதை விலா வாரியாக சேகரனுக்கு உபதேசித்து கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். அங்கு தங்கி பயிற்சி பெற்று வர எப்படியும் மூன்று நாட்கள் தேவைப்படும். மலையில் வசிக்கும் மக்களுக்கு இவர்களின் போதுச்சேவை செய்யும் இயக்கம் அங்குள்ள மக்களுக்கு பொதுச்சேவைகள் பற்றி எப்படி விளக்க வேண்டும் என்ற களப்பயிற்சி.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Mar-20, 4:07 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 186

மேலே