மனதை துளைத்த மகளின் கேள்வி
அப்பா - நீங்கள்
தினமும் - கதை எழுதிவிட்டு
தூங்க செல்கீறீர்கள்....
ஆனால் - ஒருநாளாவது
எனக்கு மழலைக் கதை சொல்லி
தூங்க வைத்தது உண்டா...?
என்ற என்மகளின் கேள்வியில்
என்மகளின் சுட்டித்தனம் மட்டுமல்ல
என்மகளின் கெட்டிக்காரத்தனமும் சேர்ந்து
என்தலையில் கொட்டியதுபோலிருந்தது...
சிலநேரங்களில் -
நமது அறியாமை
நமது பிள்ளைகளால் கற்பிக்கப்படும்...!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி