நண்பன் சொன்ன கதை

டேய் சத்ரு பேய் அப்படின்னு ஒன்று இருக்கா இல்லையா டா....
எங்க பாட்டி நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எப்ப பார்த்தாலும் பேய் கதை சொல்லும். அப்ப இருந்தே எனக்கு இந்த கேள்வி இருக்கு டா....

என்ன பழனி இன்னைக்கு ரெம்ப மூட்ல இருக்க போல . பேய் இருக்கா இல்லையா அதெல்லாம் எல்லாம் எனக்கு தெரியாது டா... ஆனா...

ஜனங்களுக்கு .
ஆசைகள் என்ற பேய்...
பயம் என்ற பேய்...
ஆணவம் என்ற பேய்...

இன்னும்  exatra.. exatra.... இதெல்லாம் ரெம்ப வே... இருக்கு டா.....

வேணும்னா நீ ஒரு நாள் நம்ம ஊர்  எல்லையில் இருக்கும் பேய் பங்ளாவுல ஒரு நாள் போய் இருந்து பாரேன்  உனக்கே தெரியும் பழனி.

எப்படி டா... என் கூடவே தானே‌ எப்பவும் இருக்க உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும் ?.. அதுவும் இல்லாம அந்த பங்களாவுல தான் பேய்கள் இருக்கே.
அங்க எதுக்கு போக சொல்ற சந்ரு.

நீ தான கேட்ட பேய் இருக்கா இல்லையா னு... ஒரு நாள் அந்த  பங்களா பக்கமா போகும் போது  அதுல இருந்த ஒரு பேய் தான் இதேல்லாம் சொல்லி அழுதது . 

அதனால்  தான் அந்த பங்களாவில் இருந்து அவங்க யாரும் ஊருக்குள்ள வருவது இல்லையாம் .நம்ம யாரையும் அந்த பங்களாவில் வர விடரது இல்லையாம் .போதுமா விவரம் இல்லை இன்னும் வேனும்னா அங்கே போய் கேட்டுக்கோ சரியா.

போதும் பா...சாமி ஆள் விடு. பேய் அது பாட்டுக்கும் அது இடத்துல இருந்துட்டு போகட்டும்.நாம பாட்டுக்கும் நாம் இருப்போம் நாட்டுல வேற விஷயமா இல்ல பேச . இப்போ இருக்க  கோரோனா வைரஸ் சே...  போதுமே விடிய விடிய பேசலாம் .வா...நண்பா போகலாம்.

என்ன நான் சொல்றது சரிதானே...

எழுதியவர் : Veenu (6-Mar-20, 1:02 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : nanban sonna kathai
பார்வை : 393

மேலே