காதலியின் வெள்ளந்திச் சிரிப்பு

என் காதலியே - தேர்வறையில்
வினாத்தாள் கொடுத்தாா்கள்
வினாக்கள் இருந்தன - ஆனால்
விடைத்தாள் கொடுத்தார்கள் -
விடையே இல்லை...!!!

எதற்கும் விடைத்தெரியாது - அன்று
நான் விழித்திருக்கையில் - உன்
விடைத்தாளையாவது பாா்த்து -
எழுதலாம் என்று -
எவரும் அறியாதவண்ணம் -
நான் பார்க்கையில் -

நமக்குள் என்ன பொருத்தம்....
இருவரின் விடைத்தாளிலும்
ஏதுமில்லை - பின்
இருக்கும் நேரங்களை
எப்படி கழிப்பதோ என்று
எண்ணிய தருணத்தில்தான் -
விடையாய் வந்து விழுத்தது....
உந்தன் வெள்ளந்திச் சிரிப்பு.....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (4-Mar-20, 8:11 pm)
பார்வை : 156

மேலே