சின்ன இடை அசைவினில்
கையைக் கோர்த்துக் கொண்டு
கடற்கரையில் நடக்க வேண்டும் - உன்
கால்தடம் பதிக்குமிடத்தில்
கற்கண்டு தோன்ற வேண்டும்
வண்ண மழைத்தூறல்
வானிலிருந்து பொழிய வேண்டும்
வளைந்தாடும் அலைக் கூட்டம்
வாழ்த்திசை பாட வேண்டும் - உன்
சின்ன இடை அசைவைப்பார்த்து - என்
சிந்தனை தடைப்பட வேண்டும்
காந்தத்தை கவரும் இரும்பாய் - நான்
காதல் கொண்டு உன்னில் கரைய வேண்டும்.
----- நன்னாடன்