அத்தனையும் அழகாக

வாழ்க்கை ஓர் புதிர்....

இது மறுக்கப்படாத உண்மையென உணர்ந்தேன்

எத்தனை சோகங்கள், துயரங்கள் மனதை புரட்டி போட்டன

வலிகளே கணங்களாக நகர்ந்த நாட்களில் தான் நீ எனக்கு அறிமுகமானாய்

இரத்தம் வடிந்த கைகளோடு என்னை மருத்துவமனையில் அனுமதித்த நாளான்று.

என்னை மறந்து போன ஒருத்திக்காக என்னை இழக்க நினைத்த நாளான்று.

அழுகையொலிகளும் என்னை அதட்டும் ஒலிகளும் செவிகளுக்கு மத்தியில் உன் குரல் கேட்டது அது ஒரு பரிசுத்தத்தின் விரல் போல என்னை நீ தொடுகையில் மயங்கி  விழுந்தேன் 

--------------

டாக்டர் பேஷண்ட் கண் விழிச்சிட்டார்

அவள் அசையாது மொபைலை கண்டுகொண்டிருந்தாள் அவள் விழிகள் ஈரத்தை உதிர்ந்தன

நர்ஸ் அவளை மெல்ல அழைத்து கேட்டால் டாக்டர் எதாவது பிரச்சனையா

அவள் விழிப்பு வந்து அதிர்ந்து எழுந்தாள்

நீ போ மேரி நான் பின்னாடியே வரேன்

நீ வருவாயென என் விரல்கள் துடித்தன உதடுகள் முனுமுனுத்தன

ஆனால் நீயோ தனிமையில் அழுதபடியே இருந்தாய்.தன் கணவன் வேறொரு பெண்ணோடு உறவாடுவதை எந்த பெண் தான் விரும்புவாள். அதை வெளிப்படையாக ஒரு புகைப்படம் வாயிலாக அவன் உனக்கு அனுப்பி வைத்த தருணமது. அதை பார்த்து தான் நீ கண்ணீர் வடித்தாய்

-------------

கண்ண திறங்க

மலர் போல என் விழிகள் விரிய கண் எதிரே சூரியன் போல நீ பிரகாசித்து கொண்டிருந்தாய்

சோகங்களை மறைத்து நீ சிரித்த வலியை நான் அன்றுணரவில்லை. கண்டபடி கத்தினேன் எனக்குள் இருந்த ஓர் மிருகத்தின் விழிப்போடு

என்ன எதுக்கு காப்பாத்தினிங்க நான் சாகாணும் நான் சாகணும் என்ன நிம்மதியாக சாக விடுங்க ப்ளீஸ் என்ன சாகவிடுங்க நான் மன்றாடினேன்

நீ பேசவில்லை மௌனமாக இருந்தாய் அருகே நின்றிருந்த என் அம்மா பயத்தின் உச்சியில் நிழலாடிக் கொண்டிருந்தாள்

ப்ளீஸ் காம் கொஞ்சம் அமைதியா இருங்க

நான் வெறி பிடித்து கத்தினேன் பின் கையில் கிடைத்த குளுக்கோஸ் பாட்டிலை எடுத்து உன் முகத்தில் வீசினேன்

என்ன சாகவிடுங்க நான் சாகணும்

அது உன் முகத்தில் பட்டு என் மீதே தெறித்து விழுந்தது உன் நெற்றியில் மெல்ல இரத்தம் வடிந்தோடியது அதைக் கண்டு மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் நர்ஸ் டாக்டர் என பதறியவாறே உன் அருகே ஓடி வர என் அம்மா என்னை அடித்தவாறே பிதற்றி அழுதுகொண்டு இருந்தால்

நீ இட்ஸ் ஓகே என்றவாறே உன் நெற்றியில் பஞ்சை அழுத்தியபடி என்னிடம் உரையாடினாய்

நீங்க செத்துட்டா இங்க எதுவும் திரும்ப கிடைக்க போறதில்லை கிடைக்காத பொண்ணுக்காக சாகறது மிகப்பெரிய கோழைத்தனம் அத நீங்க இனிமே பண்ணமாட்டிங்கனு நம்பறேன்

நான் அமைதியானேன்

அம்மா ஏன்டா இப்படியெல்லாம் பண்ற என புலம்பினாள்

நீ பின்னகர்ந்த பின் ஒன்றை உணர்ந்தேன் நான் சாகாக் கூடாதென

அம்மா உன்னிடம் அழுதவாறே மன்னிப்பு கோரினால் நர்ஸ் கோபம் தணியாமல் 
அவளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் நீ அவளை சமாதானப்படுத்தி என்னிடம் அனுப்பி வைத்தாய்

எங்களுக்கு எல்லா ஃபேஷன்டும் குழந்தை மாதிரி தான்மா நீங்க கவலைபடாம போங்க நான் தப்பா எதுவும் எடுத்துக்கல

அவள் முகத்தில் இரத்தம் உறைந்து போயிருந்தது நர்ஸ் அதன் மீது பேண்டேஜ் ஒட்டினாள்

இரண்டொரு நாள் கழித்து தான் நான் உன்னை சந்திக்க முடிந்தது நீ புத்துணர்வோடு என்னை நோக்கினாய் நான் கூனிக் குறுகி போனேன்

இப்ப எப்படி இருக்கு

நான் சாரி என்றேன்

நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே

இனி சாவே வந்து கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் போதுமா

நீ குனிந்து சிரித்தாய் தட்ஸ் குட் இந்த மோடிவோடே இருக்க பழகிக்கங்க உங்கள நம்பி தான் உங்க அம்மா இருக்காங்க அவங்கள பார்த்துக்க வேண்டியது உங்க கடமை இல்லையா

நான் மௌனமாக தலையசைத்தேன் ஓர் குழந்தையைப் போல என்னை நீ உருமாற்றினாய்

ஆம் ஒரு குழந்தையைப் போல

நீ விலகும் போது நான் மீண்டும் கூறினேன் சாரி

மெல்ல சிரித்துவிட்டு நீ நகர்ந்தாய்

அப்போது தான் விழிப்பு வந்து உன் பெயரை கேட்க நினைத்து உன்னிடம் வினவினேன்

உங்க பேர தெரிஞ்சுக்கலாமா

பவித்ரா

என்னைக் காக்க வந்த கடவுளின் மறுஉருவம் நீ.பவித்ரமான கடவுளாக நீ.

செம்மை தீட்டிய வானம், மிளிரும் சூரியன், இலை உதிர அசையும் மரம், அழுகை, முனகல், மருந்து வாசனை, இரத்த நெடி
அனைத்தும் அழகாக

இப்பொழுது

நான் வாழ ஆசைப்பட்டேன்


முற்றும்.

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (22-Mar-20, 10:17 am)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 389

மேலே