அழகு .....பேரழகு...............!
இலைகளை சுமப்பதால் ...
கிளைகளுக்கு அழகு.....
பனித்துளியை சுமப்பதால்
புல்வெளிக்கு பேரழகு......!
மேகத்தை சுமப்பதால் ....
வானத்திர்க்கு அழகு ......
விண்மீனோடு நிலவு வந்தால் ..
இரவுக்கு பேரழகு..................!
நினைவுகளை சுமப்பதால்.....
நட்புக்கு அழகு .................
காதல் நினைவுகளை சுமப்பதால் ...
காதலர்க்கு பேரழகு.............!
உறவுகளை நினைப்பதே ......
உரிமைக்கு அழகு .............
உறவுகளோடு உறவாடுவதே ..........
உயிர்களுக்கு பேரழகு............................!
கருவை சுமப்பதால்...........
தாய்மைக்கு அழகு................
அந்தத் தாயை வயதான காலத்தில்....
பிள்ளைகள் கவனிப்பதால் .......
பிள்ளைகளுக்குப்பேரழகு................!
மலையை சுமப்பதால்
மண்ணுக்கு அழகு..........
மலைவீழ் அருவியை பூமிக்கு
அனுப்புவதால் .....................
மண்ணுக்குப் பேரழகு.....................!
கவிதையை வடிப்பதால்
தமிழுக்கு அழகு ....அந்தக்
கவிதையிலும் சிந்தனைக்
கருத்திருந்தால் அந்தக்
கவிதையேப் பேரழகு.....................!
அன்பே ......!
கவிதையாய் நீ வந்தால்................
கற்பனைக்கு அழகு.............
நீயே கவிதையானால் .........................
அழகிலும் அழகு ....பேரழகு.................!