தெய்வம் நம்பிக்கைதான்

கல்லில் சிலை வடித்தான்
கலைஞன்
கடவுள் என்று
பெயர் கொடுத்தான்
ஆலயம் நிறுவி
வழிபட்டான்
சிலை என்றால்
கலைஞன்
கற்பனைதான்
தெய்வம் என்பது
நம்பிக்கைதான்
நம்பாதவனுக்கு
அது கல்
நம்புவனுக்கு
கடவுள்
-----கவின் சாரலன்