வாழ்க தளபதி
ஏற்றம் விவசாயத்தில் பெற்றிட வேண்டும்
மாற்றம் கல்வித் துறையில் வந்திட வேண்டும்
குற்றங்கள் பெறுகுதல் குறைதல் வேண்டும்
நற்றமிழ் வளர்ச்சி நிறைதல் வேண்டும்
புற்றாய் வளர்ந்த லஞ்சம் ஒழிதல் வேண்டும்
வெற்றான வாக்குறுதிகள் சுழிதல் வேண்டும்
மாற்றத்தின் நாயகனே
மறுமலர்ச்சியின் நேசனே
ஏற்றம் தமிழகம் கண்டிட
எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம்
வெற்றி வாகை சூடி
மு.க.ஸ்டாலினாகிய நான்
என்று மாபெரும் சபையில் சத்தியப் பிரமாணம் எடுத்து
தமிழகத்தின் தலைமகனாய் நீ அமரும் நாள்
இதோ வெகு விரைவில்
இன்றைய ஆரவாரமற்ற உன் பிறந்தநாள்
பேராரவாரத்துடன் விடியலை எதிர்தோக்கும் எங்களுக்கு பொன்னாள்
உடல் நலமும் உள வளமும் கொண்டு
வாழ்க நீ பல்லாண்டு!