இழப்பின் சோகம்

கொள்ளிக் குச்சிகள் எரிந்து ஓய்ந்து புகைந்து கொண்டிருக்க.....
ஈமச்சடங்குகளை முறையாய் முடித்த உறவுகள்
திரும்பிப் பாராது இடுகாட்டைக் கடக்க...
சடலத்தில் சூட்டிய மாலைகள் மயான மரங்களில் தொக்கிக் கிடந்தன
முடிந்த ஒரு அத்தியாயத்திற்கு அஞ்சலி செலுத்தியபடி.....

அடித்து அழுது முடித்த உரிமை சொந்தங்கள்
அஸ்திக்கு கலசத்துடன் காத்துக் கிடக்க
வழிநெடுக மரண ஊர்வலத்தில்
சிதறிய பூக்கள்
மணம் வீசிக் கொண்டிருந்தது ....
இழப்பின் சோகங்களை காற்றில் பரப்பியபடி...
வழிகடக்கும் நம் மனதில் ஏதோ ஒரு சோகத்தை விதைத்தபடி....

எழுதியவர் : வை.அமுதா (2-Apr-20, 4:58 pm)
Tanglish : izhappin sogam
பார்வை : 88

மேலே