நீயும் நானும்
வானத்தில் கண்சிமிட்டிய ஒற்றை விண்மீனை
ஒருவரும் அறியாது உனக்காய் களவாடி
கைக்குட்டைக்குள் பொதிந்து வைத்தேன்....
நீயும் நானும் தன்னந்தனியே ஏகாந்தவெளியில் சந்திக்கையில்
இதயம் சுமந்த அன்பை
முத்தமழையால் நீ பொழிகையில்
ஈடாய் உனக்கதை பரிசளிக்க....
விரைவில் வந்துப் பெற்றுக்கொள்....
வானம் என்னைத் தேடுகிறது....
பறிகொடுத்த தன் விண்மீனை மீட்டெடுக்க......