உயரும் நம் நாடு

கார்பொழிவு குறைந்ததாலே
ஏர்பிடித்த நிலத்தில் விரிசல் கோடு

தூரெடுக்கா குளத்தினில்
தூர்ந்து போன பள்ளங்களில் கரையான் கூடு

தேரோடும் வீதியெல்லாம் நிரந்தர பள்ளமேடு
ஊர்புறத்து எல்லைகளில் மக்கா குப்பை மேடு

கோடுகள் அழிந்தால் வளம் கோபுர மேடு
மேடுகள் சீரானால் உயரும் நம் நாடு!

எழுதியவர் : வை.அமுதா (2-Apr-20, 5:04 pm)
Tanglish : uyurum nam naadu
பார்வை : 74

மேலே