ஆசிரியர் தின வாழ்த்து
ஆலமரத்தடியில் கற்பித்து
ஆகாயம் முழுக்க வியாபித்து
ஆற்றல் இழக்க உரைத்து
ஆயுள் கரைய உழைத்து
ஆறாம் அறிவை வளர்த்து
ஆசை ஆசையாய் அணைத்து - அந்த
ஆசானை கொஞ்சம் நினைத்து
ஆருயிர் உள்ளவரை மதித்து - ஓர்
ஆசை மனதில் உதித்து சொல்கிறேன்
ஆசிரியர் தின வாழ்த்து....
-ஜாக்.