ஜெ கணேஷ் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெ கணேஷ்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  23-Nov-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Feb-2020
பார்த்தவர்கள்:  323
புள்ளி:  70

என்னைப் பற்றி...

கவிஞர், எழுத்தாளர்

என் படைப்புகள்
ஜெ கணேஷ் செய்திகள்
ஜெ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2020 12:34 pm

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தெரியும்
காதல்பணியிடம் இருந்தால் மட்டும் சொல்லுங்கள்...
விண்ணப்பத்துடன் என் விருப்பத்தையும் அனுப்ப...
-ஜாக்

மேலும்

ஜெ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2020 12:32 pm

மருத்துவ உலகம் காணாத மூலிகை
மூக்குமுழியுமான உள்ள முகத்தில்...
உன் சந்திப்பில்
இலகுவாக இருந்த என் மேனிகூட இரும்பாகுதே...
-ஜாக்

மேலும்

ஜெ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2020 12:31 pm

இராத்திரியில் யாருக்கோ உளவு பார்க்கிறது நிலவு...
ஒருவேளை என் காதல் இரகசியங்கள்
அதற்கு தெரிந்திருக்குமோ

மேலும்

ஜெ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2020 12:29 pm

வளர்த்துவிட்ட மேகத்துக்கு மதிப்பில்லை...
இடி மின்னலுக்கெல்லாம் மரியாதையில்லை..
மழைக்கு மட்டுமே மகத்துவம்..
காற்று மழையின் பக்கம் வீசுகிறது போல...

மேலும்

ஜெ கணேஷ் - ஜெ கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2020 7:20 pm

மழையையும் காணோம்
என் மாமியார் மகளையும் காணோம்

காத்து மாரியையும் காணோம்
என் ஆத்துக்காரியையும் காணோம்

எங்கடி போய்த் தொலைஞ்ச நீ..

ஓங்கிட்ட வாங்கிய அடியெல்லாம்
இடியா வெடிக்கிது..

நீ கரண்டி வச்சு சுட்ட இடம்
காஞ்சுபோய் பிக்குது..

உனக்கு காலமுக்கி விட்ட விரலெல்லாம் கலைப்புக்காக காக்குது

ஓந்துணிய தோச்ச கைகள் தோச சுட தெரியாம நிக்குது..

கொழம்பு வைக்க சொல்லிட்டு வெளிய போனயே..

உப்பு காரம் அளவு தெரியாம
கொழம்பி தவிக்குது எம்மூள

வெளிய போனவ வந்து ருசி பாத்தா
கொன்னுடுவா ஆள...

என்ன கொன்னுடுவா போல..
-ஜாக்✍️

மேலும்

ஜெ கணேஷ் - ஜெ கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2020 11:25 pm

அம்மணம் போர்த்தி உதிக்க வச்ச
அம்மா உன் நடத்தபோல மதிக்க வச்ச
தொப்புள்கொடி உறவை தொடங்கி வச்ச
உதிரம் உதிர்த்து நனையாமல் குளிக்க வச்ச..
வெதுவெதுப்பாய் இருக்க வேண்டி
மெதுமெதுவாய் மடியில் கிடத்த வச்ச..
வெட்கம் ஏதும் கொள்ளாமல் தாய்ப்பாலை எனக்குன்னு தக்க வச்ச..
பகல் சூரியன் இருந்தும் நிலவை ஏங்க வச்ச..
நீ சோறூட்டிய காட்சிகளை அதில் தேங்க வச்ச...
பட்டறிவு தேவையின்னு படிக்க வச்ச
பத்து வருஷம் அதுக்குன்னு பணத்த உழைச்ச...
வீடு வாங்க வீட்டு வேலை செஞ்ச
காரு வாங்க காட்டு வேலை புரிஞ்ச
தீபாவளிக்கு எனக்குன்னு சட்டை தச்ச
தீரா வலிக்கு எதுக்கு நீ விட்ட மூச்ச..
நீ வாங்கிகொடுத்த மரப்பாச்சி பொம்மையும் மற

மேலும்

ஜெ கணேஷ் - ஜெ கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2020 11:15 pm

போகட்டுமே.....
காதல் போகட்டுமே
சாதல் ஆகட்டுமே - என்னை குறைவின்றி குறை கூறட்டுமே
அவள் கறையின்றி கரை சேரட்டுமே...
உலகம் புரியா புத்தி எனக்கு
வெட்டத் தெரியா கத்தி எதற்கு...?
பொலிவில்லா சுடருக்கு பொன்னகல்தான் எதற்கு...?
உனை பார்க்க முடியா விதி இருக்கு
அது பார்வையில்லா வலி எனக்கு..
மனப்பாடமான பின் மறந்துபோனதே மனப்பாடமான பெண்
மறந்துபோகுதே...!
என்னை மறந்து போகுதே...!

-ஜாக்✍️

மேலும்

ஜெ கணேஷ் - நிலவின் காதலி அB அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2020 3:58 pm

என் தாயின் இளவரசி நான்....


கைகள் கூப்பி வணங்கவில்லை....

காலில் விழுந்தும் ஆசிபெறவில்லை...
ஆனாலும்

தினம் தினம்  அனுக்ரஹமும் ஆசியும் எனக்காக வழங்கும் 
 உயிருள்ள ஒரே  கடவுள் என் அம்மா.....<அB>


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே