போகட்டுமே

போகட்டுமே.....
காதல் போகட்டுமே
சாதல் ஆகட்டுமே - என்னை குறைவின்றி குறை கூறட்டுமே
அவள் கறையின்றி கரை சேரட்டுமே...
உலகம் புரியா புத்தி எனக்கு
வெட்டத் தெரியா கத்தி எதற்கு...?
பொலிவில்லா சுடருக்கு பொன்னகல்தான் எதற்கு...?
உனை பார்க்க முடியா விதி இருக்கு
அது பார்வையில்லா வலி எனக்கு..
மனப்பாடமான பின் மறந்துபோனதே மனப்பாடமான பெண்
மறந்துபோகுதே...!
என்னை மறந்து போகுதே...!

-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (4-Apr-20, 11:15 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : pogattume
பார்வை : 280

மேலே