மனச்சிறை

மயங்கினேன் உன் மகிமையில்
மடிந்து..
இயங்கினேன் உன் இயற்கையில் வியந்து..
இந்நூற்றாண்டின் இடைவிடாத
செய்தி நீ...
என் சிறையை விட்டு வெளிவராத கைதி நீ...
என்னைக் கொன்றுகொண்டு எனக்குள்ளே இருக்கும் மனிதி நீ..
என்னையேத் தின்றுகொண்டு எனக்கே கொடுக்கும் எந்தன் பாதி நீ..
காதலைக் கொன்ற கைதியாய் நீ இருக்க - உன் தண்டனையை ஏன் நான் சுமக்க..?
விளங்காத கைதியாய் நீ இருக்க
கைவிலங்குடன் ஏன் நான் இறக்க..?
என் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்காதே....
உடைத்துக்கொண்டு வெளியேற நீ இருப்பது மரச்சிறையிலல்ல..!
என் மனச்சிறையில்.....
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (4-Apr-20, 12:05 am)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 322

மேலே