காகிதத்தில் ஓர் காதல்
காகிதத்தில் எழுதியே உன்னைக் காதலிக்கிறேன்...
காலம் முழுதும் அதையே காதல் என நினைக்கிறேன்..
உன் சுவாசத்தையே நுகர்ந்து கொள்கிறேன்..
ஆயுள் கடந்தும் அதையே மணந்து
கொள்கிறேன்..
பயணம் செய்யும் பறவையாக
பாதை தேடும் நதியாக வாழ்க்கையைக்
கடக்கிறேன்..
அமிர்தத்தின் ஆயுளானவளே...
சொர்கத்தின் வாயிலானவளே..
கற்கண்டு போல் கண்ணம் கொண்டவளே..
பொன்வண்டு போல் வண்ணம் கொண்டவளே..
மறைமுகமாய் என் மனதை மறந்தவளே..
மந்திரம் போட்டு என்னை வெறுத்தவளே..
துளையில்லா மூங்கிலில் இசைத்தவளே..
தூரத்து தேசத்தில் பிறந்தவளே..
உன் இமைகள் விடுக்கிறது இயற்கைக்கோர் விதி..
அதை மீறித்தான் காண முடிகிறது
உன் கண்ணின் விழி..
என் மனதில் ஊமைப் போன்ற ஒரு உணர்வு..
என் வலியின் உவமை நீயென்ற ஓர் கனவு..
உன் கற்பனையை மட்டும் கைகோர்க்கிறேன் பெண்ணே..
கடைசிவரை அதையே காதலிக்கிறேன் கண்ணே..
-ஜாக்✍️