பொக்கிஷமே

பூவுலகு போற்றும் பொக்கிஷமே...
பூ உலகே தோற்கும் பெண் புஷ்பமே
மேனியில் ஊறும் மேன்மை விஷமே..
மேலும் வலுவூட்டும் என் ஆண்மை விஷயமே..
எனது புத்தியெல்லாம் புழுதிகள் -அதை
சுத்தியெல்லாம் உனது செய்திகள்..
எனது முதுமையில் மூக்கு நுழைத்து ஓர் இளமையை எடுத்துரைத்தாய்...
முதுமை முதிர்ந்தும் முடிவு இல்லை
இளமை இருந்தும் இனிமை இல்லை
நீ இறந்த காலம் அது இருண்ட காலம்
நீ இருந்த காலம் அதில் இருந்தேன் நானும்..
நீ நீங்கிய உலகம் -அது
நீர் நீங்கிய உலகமடி..
நீ மீளாத் துயரமடி-அது
மேலும் துரத்துதடி...
என்னை உருத்துதடி
நெஞ்சம் உருக்குதடி
கொஞ்சம் கனக்குதடி....
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (4-Apr-20, 11:19 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : pokkishame
பார்வை : 277

மேலே