நான் உன் பிள்ளை

அம்மணம் போர்த்தி உதிக்க வச்ச
அம்மா உன் நடத்தபோல மதிக்க வச்ச
தொப்புள்கொடி உறவை தொடங்கி வச்ச
உதிரம் உதிர்த்து நனையாமல் குளிக்க வச்ச..
வெதுவெதுப்பாய் இருக்க வேண்டி
மெதுமெதுவாய் மடியில் கிடத்த வச்ச..
வெட்கம் ஏதும் கொள்ளாமல் தாய்ப்பாலை எனக்குன்னு தக்க வச்ச..
பகல் சூரியன் இருந்தும் நிலவை ஏங்க வச்ச..
நீ சோறூட்டிய காட்சிகளை அதில் தேங்க வச்ச...
பட்டறிவு தேவையின்னு படிக்க வச்ச
பத்து வருஷம் அதுக்குன்னு பணத்த உழைச்ச...
வீடு வாங்க வீட்டு வேலை செஞ்ச
காரு வாங்க காட்டு வேலை புரிஞ்ச
தீபாவளிக்கு எனக்குன்னு சட்டை தச்ச
தீரா வலிக்கு எதுக்கு நீ விட்ட மூச்ச..
நீ வாங்கிகொடுத்த மரப்பாச்சி பொம்மையும் மறுத்துப்போய் கிடக்குதம்மா..
நீ வாரிவிட்ட தலைவகிடும் வழித்தெரியாம திரியிதம்மா..
எல்லாதையும் தந்துட்டு போன அடிக்கடி என் கனவுலையும் வந்துட்டு போன
நீ ஈன்ற என்னை இனிமேல் சுமக்க யாருமில்ல..
உன்னால் பூத்த மலரை தொடுக்க நாருமில்ல..
இது மாறவில்ல..
நான் ஓம்புள்ள.
-ஜாக்.✍️

எழுதியவர் : ஜாக் (4-Apr-20, 11:25 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : naan un pillai
பார்வை : 371

மேலே