அம்மா என்றால் அன்பு

அம்மா என்றால் அன்பு
--------------------------
அம்மா என்றாலே மகிழ்வான காதல்
அணையாத வாசனையாய் அரவணைக்கும் வாசனைதிரவியம்
அணையாத சொல்லின் அழகான பொருள்
அவள்துணையோடு உலகமும் அழகாய் அசைகிறதே
உறங்காமல் துடித்தே உணர்வுகளை உடுத்துக்கொள்வாள்
உமிழ்ந்தே உண்டு உயிர் கொடுப்பாள்
தன்னையே மறைத்து தன்பிள்ளையை உதிக்கச்செய்வாள்
தடுமாறி போகாமலே தடுத்து வந்திடுவாள்
தாயின் அரவணைப்பு தரணியில் உயர்கையில்
அவளே மனந்தோறும் மலரும் பூவாவால்
கவிச்சுடர் அகிலன் ராஜா

எழுதியவர் : கவிச்சுடர் அகிலன் ராஜா (28-Mar-20, 12:12 am)
Tanglish : amma endraal anbu
பார்வை : 305

மேலே